கோவிட்-19 (ஜனவரி 21): புதிய நேர்வுகள் 4,000 ஐக் கடந்தன

கோவிட்-19 | மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) இன்று மொத்தம் 4,046 புதிய கோவிட்-19 நேர்வுகள் கண்டறியப்பட்டதாக அறிவித்தது. இது ஒட்டுமொத்தமாக 2,824,973 ஆக உள்ளது.

இன்று பதிவான புதிய தொற்றுகள் 34 நாட்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன (கடந்த ஆண்டு டிசம்பர் 18 முதல்).

கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது 19.2 சதவீதம் குறைந்துள்ளது.

3,764 புதிய நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (ஜனவரி 20) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (894)

கோலாலம்பூர் (476)

ஜோகூர் (414)

கிளந்தான் (360)

கெடா (275)

சபா (256)

பகாங் (244)

பினாங்கு (225)

நெகிரி செம்பிலான் (218)

மலாக்கா (167)

பேராக் (124)

தெரெங்கானு

புத்ராஜெயா (20)

சரவாக் (14)

பெர்லிஸ் (11)

லாபுவான் (1)