எங்களின் ஆதரவு நிபந்தனைக்கு உட்பட்டது – பாஸ், பெர்சத்து

பாஸ் மற்றும் பெர்சத்து, அம்னோ அரசாங்கத்திற்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோபுக்கும் அளிக்கப்பட்ட ஆதரவு இலகுவானது அல்ல, நிபந்தனையுடன் கொடுக்கப்பட்டது என்பதை நினைவூட்டுவதாக கூறின.

பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் (மேலே) மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் ஷா ஆலமில் இன்று கூட்டாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினர்.  ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பெர்சத்துவுக்கு மொத்தம் 32 எம்.பி.க்கள் உள்ளனர், அதே சமயம் பாஸ் கட்சிக்கு 18 பேர் உள்ளனர், சட்ட மன்றத்தில்  உள்ள 221 இடங்களில் மொத்தம் 50 பேர் உள்ளனர். 222-வது இருக்கை காலியாக உள்ளது.

அம்னோ துணைத் தலைவரான பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு 116 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அவர்களில் பாஸ் மற்றும் பெர்சத்துவின் 50 எம்.பி.க்களும் அடங்குவர்.

ஜொகூர் தேர்தலின் போது பெர்சத்து மற்றும் பாஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் மீண்டும் பிஎன் சின்னத்தில் போட்டியிடும் என்று முஹிடின் கூறினார்.

பிஎன் மகத்தான வெற்றியைப் பெற்ற மலாக்கா தேர்தலில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு  மேலும் சிறப்பாக செயல்படும் என நம்புவதாகவும் முஹிடின் கூறினார்.

அம்னோவின் தற்போதைய ஜோகூர் மந்திரி பெசார்  ஹஸ்னி முகமது ஜனவரி 22-இல்   ஜொகூர் மாநில சட்டசபையை கலைத்ததின் வழி  60 நாட்களுக்குள்ளான புதிய தேர்தலுக்கு வழி வகுத்தார்.

வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளை பிப்ரவரி 9-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.