MOH – உதவி சுகாதார அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்கும்

சுகாதார அமைச்சகம் (MOH) , தற்போது உதவி மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொதுச் சேவை ஆணைக்குழுவின் (SPA) உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒப்பந்த மருத்துவர்கள் போன்றே,  உதவி மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளனர்.

ஒப்பந்த மருத்துவர்களைப் போலவே உதவி ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளும் பணிப் பாதுகாப்பு இல்லாமை மற்றும் நிரந்தர ஊழியர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த சலுகைகள் உட்பட இதே போன்ற கவலைகளுடன் போராடுகிறார்கள்.

சுகாதார அமைச்சக பயிற்சி நிறுவன பட்டதாரிகளில் இருந்து 1,243 தரம் U29 உதவி மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை பிப்ரவரி 2 ம் தேதி முடிவடையும் நிலையில் நீட்டிக்க பொது சேவை ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சக செயலாளர் ஜெனரல் மொகமட் ஷாபிக் அப்துல்லா(Mohd Shafiq Abdullah) ஒரு அறிக்கையில் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது உதவி மருத்துவ அதிகாரிகளின் பங்களிப்பை சுகாதார அமைச்சகம் பாராட்டுகிறது என்று முகமட் ஷபிக் கூறினார்.

“மலேசியாவின் தற்போதைய நிலை மற்றும் கோவிட்-19 காரணமாக தாமதமான சேவைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2022 இல் ஒப்பந்தத்தை நிறுத்தும் சுகாதார ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க MOH பரிந்துரைத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.