போலிஸ் காவலில் இந்திய இளைஞர் மரணம் – 53 நாட்களுக்கு மூடி மறைக்கப்பட்டதா?    

பினாங்கில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 34 வயது இந்தியரின் குடும்பத்தினர், சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்தும், தங்களுக்கு எப்படித் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

இறந்தவர் குமார் செல்வதுரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கெபாலா படாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

அவரது இளைய சகோதரர் தினேஸ் செல்வதுரை இன்று (5.2.2022)  செய்த காவல்துறை புகாரில், குமாரின் மரணம் நிகழ்ந்து 53 நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்கிறார்.

மேலும், இறந்தவரின் குடும்பத்தினர் யாரும் உரிமை கோராததால், குமாரின் உடல், பெயரிடப்படாத அரசு சாரா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

செபராங் பெராய் நகர சபையின் ஆர்வலரும் கவுன்சிலருமான டேவிட் மார்ஷலின் கூற்றுப்படி, குமார் டிசம்பர் 10-இல் கைது செய்யப்பட்ட்தாகவும்,   செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வலிப்புத்தாக்கத்தால் காலமானதாக கூறப்ப்டுகிறது.

“தினேஸ் கைது செய்யப்பட்டதை அறிந்திருந்தார் மேலும் தகவல் அறிய பட்டர்வொர்த் காவல் நிலையத்திற்குச் சென்றார்.

“கெப்பாலா பத்தாஸ் போலீஸ் தலைமையகத்திற்குச் செல்லும்படி அவரிடம் கூறப்பட்டது, அங்கு அவர் குமாரைப் பார்த்தார்,” என்று டேவிட்டை தொடர்பு கொண்டபோது கூறினார்.

டேவிட் கூற்றுப்படி, குமாரின் விசாரணைக்காக அடுத்த நாள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்லும்படி தினேஸ் கூறப்பட்டார்.

ஆனால், நீதிமன்ற வளாகத்தில் குமாரை எங்கும் காணவில்லை.

தினேஸ் கெப்பாலா பத்தாஸ் காவல் நிலையத்திற்குத் திரும்பியபோது, ​​அவரது சகோதரர் ஜாவியில் உள்ள செபராங் பெராய் சிறைக்கு மாற்றப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அங்கு வினவப்பட்டபோது, ​​குமாரின் தடுப்புக்காவல் குறித்து தங்களிடம் எந்தப் பதிவும் இல்லை என்று காவல் தடுப்பு மையம் தினேஸிடம் தெரிவித்தது, என்று டேவிட் குற்றம்சாட்டிகிறார்.

காணாமல் போனோர் தொடர்பான புகாரை தாக்கல் செய்ய பட்டர்வொர்த் காவல் நிலையத்திற்கு தினேஸ் சென்றபோது, ​​குமாரின் மரணம் குறித்து நேற்றுதான் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் மேலும் டேவிட் கூறினார்.

தற்போது குமாரின் சந்தேக மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி போலீசில் புகார் செய்யப்பட்டுளது. (தகவல்: the vibes.com)