இஸ்லாத்தைத் தழுவிய 3 குழந்தைகளுடன் தாய் மீண்டும் இணைந்தார்

தனித்து வாழும் பெண் லோ சீவ் ஹாங் நேற்று தனது மூன்று குழந்தைகளுடன் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது, குழந்தைகளை அழைத்து வருவதற்கு சனிக்கிழமை போலீஸ் உதவியை நாடினார்.

கெந்திம ஹைலேண்ட்ஸில் சமையல்துறையில் பணிபுரியும் அவர் தனது  மூன்று குழந்தைகளையும் பெர்லிஸில் உள்ள கங்கார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) சந்தித்தார்.

இருப்பினும், கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் விண்ணப்பத்தின் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், பிப்ரவரி 21 வரை குழந்தைகள் பெர்லிஸ் நலத்துறையின் பராமரிப்பில் இருப்பார்கள்.

“நான் மூன்று ஆண்டுகளாக எனது குழந்தைகளைப் பார்க்கவில்லை, அவர்கள் ஆரம்பத்தில் என்னுடன் வர தயங்கினர். அவர்கள் என்னுடன் வீட்டிற்கு வந்தால் தந்தை சிறையில் தனக்குத்தானே காயப்படுத்திக் கொள்வார் என்று கவலைப்பட்டனர்,” என்று அந்த 34 வயதான தாய் கூறினார்.

இந்த தம்பதியினரின் விவாகரத்துக்குப் பிறகு, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் 2021-இல் அளித்த  தீர்ப்பின் படி இந்த மூன்று குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமை தாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவரது கணவர் நாகஸ்வரன் முனியாண்டி அவர் இல்லாத நேரத்தில் மூன்று குழந்தைகளையும் கடத்திச் சென்று, அவர்களை மதமாற்றி பெர்லிஸில் உள்ள இஸ்லாமிய மையத்தில் தங்க வைத்தார். தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான முனியாண்டி  சிறையில் உள்ளார்.

லோ தனது குழந்தைகளை காவல் நிலையத்தில் சந்தித்தவுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால், இது சட்டம் சார்ந்ததாக இருந்ததால் அவர்களை நலத்துறையின் பராமரிப்பில் இருக்க முடிவு செய்யப்பட்டது. இது சார்பான வழக்கு உயர் நீதி மன்றதில் பதிவு செய்யபப்டும்.

சனிக்கிழமையன்று காவல்துறை அறிக்கையின்படி, லோ தனது கணவரிடமிருந்து மார்ச் 2019 முதல் பிரிந்து இருந்ததாகவும், பின்னர் தனது 14 வயது இரட்டையர்கள் மற்றும் 10 வயதுடைய குழந்தைகளிடமிருந்து  பிரிந்ததாகவும் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அவர் தனது குழந்தைகளை கண்டு பிடித்ததாக கூறினார்.

முதலில், அதிகாரிகள் லோவை குழந்தைகளுடன் சந்திக்க அனுமதிக்கவில்லை, பிறகு சனிக்கிழமையன்று போலீஸ் புகாரை பதிவு செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

பாகன் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி மற்றும் தமிழர் குரல் மலேசியத் தலைவர் டேவிட் மார்ஷல் – லோ போலீஸ் புகாரை பதிவு செய்ய உதவியவர்.