ஜொகூரில் மசூதிகள், சுராவ்களில் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை

ஜொகூர் மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சுராவ்களில்  அரசியல் கட்சி பிரமுகர்களும், தலைவர்களும் அரசியல் நடவடிக்கைகள் நடத்த அனுமதியில்லை.

ஜொகூர், இஸ்லாமிய மதத் துறையின் (JAINJ) மசூதி மற்றும் சுராவ் நிர்வாகப் பிரிவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மாநில இஸ்லாமிய மத விவகாரக் குழுத் தலைவர் தோஸ்ரின் ஜார்வந்தி தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்ட காடியும் (kadi) தங்கள் பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்கள் அரசியல் நடவடிக்கைகள் இடமாக பயன்படுத்தாமல் இருப்பதை  உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது என்றார்.

அப்படி ஏதேனும் நடைபெற்றால், அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய ஜொகூர் இஸ்லாமிய மத கவுன்சிலின் (MAINJ) ஃபத்வா பிரிவுக்கு அனுப்பப்படும் என்று தோஸ்ரின் கூறினார்.

தேர்தல் ஆணையம் (EC) ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான (PRN) வாக்குப்பதிவு தேதியாக மார்ச் 12 என நிர்ணயித்துள்ளது, வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 26 லும் மற்றும் முன்கூட்டியே வாக்களிக்கும் தேதி மார்ச் 8 ஆகும்.