தேக்க குளங்களைச் சுற்றி மட்டுமே வளர்ச்சித் திட்டம், பாதிப்பு எதுவுமில்லை – ஷாஹிடான்

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்  6 நீர் தேக்கக் குளங்களில் இரண்டைச் சுற்றி மட்டுமே மேப்பாட்டு வளர்ச்சித் திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஷாஹிடான் காசிம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த அபிவிருத்தி, குளங்களின் ஓரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், எனவே, டெலிமா  குளம் மற்றும் தாமன் வஹ்யு குளத்தின் நீர் கொள்ளளவு பாதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இருப்பினும், இந்த 6 குளங்களில், சில மட்டுமே மேம்பாட்டுக்காக  ஈடுபட்டுள்ளன, ஆனால் அதில் ஒப்புதல் ரத்தும் செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட இணையத்தளமான Wilayahku இல் கூறினார்.

தேக்க குளங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஷாஹிடான் தெரிவித்தார்.

Department of Irrigation and Drainage Malaysia (JPSWPKL), Federal Territories of Lands and Mines Office (PTGWPKL) and the Planning Department of Kuala Lumpur City Council (DBKL) ஆகிய துறைகள் இந்த விளக்கத்தை அளித்தன.

Seputeh MP Teresa Kok, Cheras MP Tan Kok Wai, Kepong MP Lim Lip Eng and Bukit Bintang MP Fong Kui Lun, Federal Territories Ministry Secretary-General Rosida Jaafar and Kuala Lumpur mayor Mahadi Che Ngah ஆகியோர் கலந்துகொண்டனர்.

Batu pond, Nanyang pond, Delima pond, Taman Wahyu pond, Batu 4 1/2 pond, and Taman Desa pond ஆகியவை கேள்விக்குரிய 6 தேக்கக் குளங்களாகும்.

ஷாஹிடான் கூறுகையில், இப்போது ரத்து செய்யப்பட்ட நீர் தேக்க குளங்களை உள்ளடக்கிய திட்டங்கள் தாமன் தேச குளம் மற்றும் பத்து 4 1/2 குளம் ஆகியவை பாதிப்பை உண்டாக்கும் தன்மையை கொண்டவை என்றார்.

எந்தவொரு வணிக அபிவிருத்தித் திட்டமும் அல்லது ஆறு தேக்கக் குளங்களின் உரிமையையும் தனியாருக்கு மாற்றப்போவது வதும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பட்சில் (Fahmi Fadzil), மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து, மத்திய பிரதேச அமைச்சர் ஷாஹிடான் காசிம் கோலாலம்பூரில் வளர்ச்சித் திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட6 வெள்ளத் தேக்கக் குளங்களின் நிலைமையை விளக்க வேண்டும் என்று முன்பு வலியுறுத்தினார் .

2019 ஆம் ஆண்டுக்கான ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையின் அடிப்படையில் ஆறு குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட திகதி மற்றும் அவை எந்த நிறுவனங்களுக்கு சென்றன என்பதை பட்டியலிட்டதன் அடிப்படையில் திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது அவை ரத்து செய்யப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் குளங்கள் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளது எம்ஏசிசி.