பெங் ஹாக்கின் மரணத்துடன் தொடர்புடைய எம்ஏசிசி அதிகாரியின் பட்டத்தை ரத்து செய்க!

2009 ஆம் ஆண்டு தியோ பெங் ஹாக்கின் மரணத்தில் தொடர்புடைய ஒரு எம்.ஏ.சி.சி அதிகாரிக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட “டத்தோ செரி” பட்டத்தை திரும்பப் பெறுமாறு யாங் டி-பெர்த்வான் அகோங் வலியுறுத்தப்பட்டுள்ளார்.

தியோ பெங் ஹாக் அறக்கட்டளை இன்று வெளியிட்ட அறிக்கையில், ஹிஷாமுடின் ஹாஷிம் பிப்ரவரி 8 அன்று “செரி மக்கோத்தா விலாயா” (Seri Mahkota Wilayah) பட்டத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டது.

2009 இல், ஹிஷாமுடின் சிலாங்கூர் எம்ஏசிசி துணை இயக்குநராக இருந்தார். தியோவின் இறப்பிற்கு முன் அவர் தியோவை ( மேலே ) விசாரிக்கும் பொறுப்பில் இருந்தவர்.

ஹிஷாமுடின் இப்போது ஊழல் தடுப்பு அமலாக்க முகமையின் விசாரணைகளுக்கான மூத்த இயக்குநராக உள்ளார்.

ஹிஷாமுடின் பட்டத்தை பெறும் தகுதியில்லை என்று அறக்கட்டளைத் தலைவர் இங் யாப் ஹுவா கூறினார்.

“பொறுப்பற்ற சிலர் மாமன்னரின் மாட்சிமையை குழப்பிவிட்டதாக அறக்கட்டளை கவலை கொண்டுள்ளது. ஒரு குடிமகனின் மரணத்தில் சந்தேகப்படும் ஒரு நபருக்கு அத்தகைய உன்னதமான பட்டத்தை வழங்குவது உங்கள் மாட்சிமையின் உருவத்திற்கு அவமானத்தை  விளைவிக்கும்.”

“எனவே, மலேசியாவில் அரசியலமைப்பு முடியாட்சி முறையை விரும்பும் குடிமக்கள் என்ற முறையில், உங்கள் மாட்சிமை ஹிஷாமுடினின் பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று இங் கூறினார்.

“ஹிஷாமுடின் பட்டத்திற்கு தகுதியானவர் அல்ல. உண்மையில், இந்த நாட்டில் நீதி வழுவா நெடுமுறை இருப்பின், இந்த நபர் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) அல்லது பிரிவு 304 (குற்றத்திற்குரிய கொலை) ஆகியவற்றின் கீழ் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

அறக்கட்டளையின் மனுவின் கடிதத்தை அகோங்கிற்கு அனுப்பியதாக இங் கூறினார்.

தற்கொலை செய்யும் மன்நிலைக்கு தள்ளப்பட்டார்

14வது மாடியில் உள்ள சிலாங்கூர் எம்ஏசிசி தலைமையகத்தில் இரவு முழுவதும் விசாரிக்கப்பட்ட பின்னர், ஜூலை 16, 2009 அன்று, ஷா ஆலமில் உள்ள பிலசா மசலாம் 5-வது  மாடியின் நடைபாதையில், தியோ இறந்து கிடந்தார்.

அக்காலகட்டத்தில், ​​தியோ சிலாங்கூர் மாநில நிருவாக  கவுன்சிலராக (எக்ஸ்கோ) டிஏபி செரி கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினருமான இயன் யோங் ஹயன் (Ean Yong Hian Wah) அவர்களின் அரசியல் உதவியாளராக இருந்தார்.

2011 இல், இராயல் விசாரணை ஆணையம் (RCI) எம்ஏசிசி தீவிரமான விசாரணையினால் ந்து தியோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாகத் தீர்மானித்தது.

RCI அறிக்கை ஹிஷாமுடின் மற்றும் இரண்டு எம்ஏசிசி அதிகாரிகள் – முகமது அனுவார் இஸ்மாயில் மற்றும் முகமட் அஷ்ரப் முகமட் யூனுஸ் – விசாரணையை தீவிரமாகவும்  பொருத்தமற்ற முறையிலும் நடத்தியதற்காக குற்றம் சாட்டியது.

இயன் யோங்  தனது அரசியல் கட்சிக்கு ஆதாயமளிக்கும் வகையில் பொய்யான நிதி ஒதுக்கீடு பெற  தாக்கல் செய்ததாக, MACC இன் விசாரணையில் வாக்குமூலம் அளிக்குமாறு, அந்த  மூவரும் தியோவுக்கு மன அழுத்தம் கொடுத்ததாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

இறுதியில் இயன் யோங் எந்த முறைகேடும் செய்ய இல்லை என்பது உறுதி படுத்தப்பட்டது.

RCI அறிக்கை வெளியான பிறகு, சம்பந்தப்பட்ட மூன்று எம்ஏசிசி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முன்னணி அரசாங்கம் உறுதியளித்தது.

மேலும் எம்ஏசிசி-யின் விசாரணை நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.