கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய இடங்களில் கனமழை எச்சரிக்கை

கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் நாளை வரை கனமழை நீடிக்கும் காரணமாக வானிலை ஆய்வு மையம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளாந்தனில், கோலாக்ராயில் உள்ள கலாஸ், லெகிர், நாட், துரியன் மற்றும் பாஹி ஆறுகள் மற்றும் தனா மேராவில் உள்ள சுங்கை கோலோக் (Galas, Lekir, Nat, Durian and Pahi rivers in Kuala Krai, and Sungai Golok in Tanah Merah) ஆகிய ஆறுகளுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

திரங்கானுவில், கெமாமன், கெருவாக், பெசுட், நெரஸ், செட்டியு, சாலோக், பெராங் மற்றும் டெலிமோங்(Kemaman, Keruak, Besut, Nerus, Setiu, Chalok, berang and Telemong) ஆறுகளுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையில், கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ரவுப், டெமர்லோ, மாறன் மற்றும் ரோம்பின்(Cameron Highlands, Lipis, Raub, Temerloh, Maran, and Rompin in Pahang) ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர்(Perlis, Kedah, Penang, Perak, Selangor, Kuala Lumpur, Putrajaya, Negeri Sembilan and Johor) ஆகிய இடங்களில் வசிப்பவர்களையும் தொடர் மழைக்கு எச்சரிக்கை செய்துள்ளது.