டிஜிட்டல் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை முதலாளிகள் ஏற்க வேண்டும்

கோவிட் நோயாளியின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த பிறகு, அனைத்து முதலாளிகளும் தொடர்புடைய தரப்பினரும் டிஜிட்டல் வீட்டு கண்காணிப்பு ஆணை (HSO) மற்றும் விடுவிப்பு  ஆணை (RO) ஆகியவற்றின் டிஜிட்டல் நகலை ஏற்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

இது கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் (CACs) நெரிசலைத் தவிர்க்கும் என்று சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று அவர் ஒரு அறிக்கையில் தேசிய கோவிட் விழிப்பு நிலை மையங்களில் பதிவாகும் தரவுகளின் எண்ணிக்கையில் சுமார் 90% வீட்டு தனிமை படுத்ததலிருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக வருபவர்கள்.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்புகளைப் பெற்று வருமாறு கோரிப்படுகின்றனர்.

“இது CAC (COVID-19 ASSESSMENT CENTER) களில் பணிச்சுமையை அதிகரிக்க வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.

நூர் ஹிஷாம் அனைத்து முதலாளிகளும் இந்த விசயத்தில் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் HSO மற்றும் RO டிஜிட்டல் சான்றிதழ்களை ஏற்க வேண்டும் என்றும் ஊழியர்களை CAC களில் இருந்து சரிபார்ப்பு பெற கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

மருத்துவமனைகளில் கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கைகள் பயன்பாட்டின் சதவீதத்தில், ஆறு மாநிலங்கள் 50 % அதிகமான பயன்பாட்டு சதவீதத்தைக் காட்டியுள்ளன, அதாவது கிளந்தான் (86 %), ஜொகூர் (59%), லாபுவான் (57%), கோலாலம்பூர் (54%), சபா (52%), மலாக்கா (50%).

கோவிட் தாக்கம் வகைகள் 

இதற்கிடையில், நேற்று பதிவு செய்யப்பட்ட நேர்மறை கோவிட் -19 நேர்வுகளில், 1 மற்றும் 2 வகைகளில் 99.4% நேர்வுகளுடன் 32,070 நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 180 நேர்வுகள் அல்லது 0.56% வகைகள் 3, 4 மற்றும் 5 இல் பதிவாகியுள்ளன.

23,332 நபர்கள்  குணமாகியுள்ளனர், இதுவரையில் மொத்த குணமாகியுள்ளோர் எண்ணிக்கை 3,018,172 ஆக உள்ளது.

வகை 1 மற்றும் 2 –  அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளைக் குறிப்பிடுகின்றன.

வகை 3 –  நுரையீரல் பாதிப்படைந்த நிலை

வகை 4 – நுரையீரல் தொற்றுகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது

வகை 5 – உறுப்பு சேதம் மற்றும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கிறது.