மக்கள் நீதிக் கட்சி, மூடா கட்சிக்கு எதிராகச் செயல்படாது –  பாராட்டினார் குவான் எங்

மக்கள் நீதிக் கட்சி (PKR), மூடா (MUDA) கட்சிக்கு எதிராகச் செயல்படாது – என்ற கருத்தைப்   பாராட்டினார் லிம் குவான் எங்.

ஜனநாயக செயல் கட்சி (DAP) இதனை வரவேற்பதாகவும், நமது குறிக்கோள் தேசிய முன்னணி (BN)  மற்றும் தேசிய கூட்டணி (PN) கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பதுதான் என்றார்.

லார்கின் (Larkin)  தொகுதியில் மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா என்ற அந்த   இளைஞர் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

இந்த சிக்கலில் சுமுகமாகத் தீர்வு காணப்படவேண்டும் என  லிம் குவான் எங் கருத்துரைத்தார்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களின் பங்கீடு சுமுகமாக நடந்துள்ளது. லார்கின் தொகுதியில் மட்டும் மூடா கட்சி தனது  வேட்பாளரை மக்கள் நீதி கட்சிக்கு எதிராக நிறுத்தியுள்ளது.