டிஏபி வேட்பாளரிடம் குறைகளை வரிந்து கட்டிய வியாபாரி

டிஏபியின் ஜொகூர் ஜெயா வேட்பாளர் லியோவ் சாய் துங் உள்ளூர் சந்தையில் நடைபயணம் மேற்கொண்டபோது, ​​ஒரு வியாபாரி அவரிடம் தனது குறகளை மான வாரியாக வரிந்து கட்டியகாணோளி வைரலாகியது.

அதில்,  பழங்களை விற்கும் வியாபாரி, டிஏபி கட்சியை விரும்புவதாக அறிவித்தார், ஆனால் சாலைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதால் அதன் வேட்பாளர் லியோவை ஆதரிக்க போவதில்லை என்றார்.

“எனக்கு DAP பிடிக்கும் ஆனால் நான் இவரை ஆதரிக்க மாட்டேன். அவர்களால் வேலை செய்ய முடியாது. பல விபத்துகள் நடந்துள்ளதால் சாலை சந்திப்பை சரிசெய்யச் சொன்னேன், ஆனால் அதை எனக்கு செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.

“ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதைச் செய்யச் சொன்னேன், ஆனால் நீங்கள் சொன்னது எல்லாம் ‘ஆம், ஆம், ஆம்’,” என்று அவர் கூறினார்.

லியோவைத் தொடர்பு கொண்டபோது, ​​பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவரது அலுவலகம் அந்த புகாரை பெற்றதாகக் கூறினார்.

ஜோகூர் பாரு சிட்டி கவுன்சில், கோரிக்கையின் பேரில், நகர சபை அவர் குறிப்பிட்ட சாலை சந்திப்பில் ஒரு மஞ்சள் கோடுகள் பெட்டியை வரைந்தது, மேலும் ஒரு வேகத்தடையையும் கட்டியது, ஆனால் வியாபாரி சாலையின் மறுபுறத்தில் மற்றொரு வேகத்தடையை விரும்பினார்.

லியோவ், நகர சபை சந்திப்பில் போக்குவரத்து விளக்கை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தனது அலுவலகம்  இந்த பிரச்சினையை பின்தொடர்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் வியாபாரியின் விமர்சனத்தை தான்  ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

ஜொகூர் ஜெயாவில் சட்ட மன்ற உறுப்பிணராக  இருக்கும் லியோவ், தான் வியாபாரியின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அவரது விரக்தியைப் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

“நாங்கள் நிறைய உள்ளூர் மேம்பாடுகளைச் செய்துள்ளோம், ஆனால் எல்லாவற்றையும் சரியாகச் செய்வது சாத்தியமில்லை”, என்று அவர் கூறினார்.

ஜொகூர் ஜெயாவில் அவரது வாய்ப்புகளைப் இந்த காணொளி பாதிக்குமா என்ற கேள்விக்கு,  “வியாபாரியின் மகிழ்ச்சியின்மை தவிர, காலை நேர நடைப்பயணம் முழுவதும் பொதுமக்களின் கருத்து எனக்கு மனநிறைவு கொடுக்கிறது லியோவ் கூறினார்,

ஜோகூர் ஜெயாவின் கலப்புத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்கள்  Chan San San மற்றும் தேசிய கூட்டணியின் Ker Ching Sheng லியோவ்  ஆகியோரை எதிர் கொள்கிறார்.

இந்தத் தொகுதியில்  47 சதவீதம் சீனர்கள், 43 சதவீதம் மலாய்க்காரர்கள் மற்றும் ஏழு சதவீதம் இந்தியர்கள் உள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில், 1MDB ஊழல் காரணமாக  எதிரான வலுவான அலைக்கு மத்தியில் லியோவ் 15,565 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்

ஜோகூர் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று தொடங்கியது. மார்ச் 12-ம் தேதி ஜோகூர் மக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.