அசாம் பாக்கியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – வான் ஜுனைடி

பினாமி பங்கு வர்த்தக ஊழலில்,  எம்ஏசிசி தலைமை நிருவாகி  அசாம் பாக்கி குற்றமற்றவர் என்று பங்கு பரிவர்த்தனை  ஆணையம்  அறிவித்ததை தொடர்ந்து, அவரை பதவி மாற்றம் செய்வது  குறித்த பிரச்சினை எழவில்லை என்று சட்ட துறை  அமைச்சர் வான் ஜுனைடி துன்கு ஜபார் கூறினார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும் என்றார்.

“அசாம் செக்யூரிட்டீஸ் இண்டஸ்ட்ரி (மத்திய டெபாசிட்டரிகள்) சட்டம் 1991 (சிக்டா) ஐ மீறினார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று எஸ்சி கண்டறிந்தது ,” என்று வான் ஜுனைடி மேலும் கூறினார்.

எனவே, தலைமை ஆணையரின் பங்கு உரிமை தொடர்பான பிரச்சினையில் மேலும் சர்ச்சை தேவையில்லை என்றார்.

இந்த விவகாரம் பங்கு பரிவர்த்தனை  ஆணையம்  அதிகார வரம்பிற்குள் வருவதால் போலீசார் விசாரிக்க வேண்டியதில்லை.

‘”தன்னை அவதூறாக பேசிய நபருக்கு எதிராக அசாம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார், இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் சட்ட நிந்தனைக்கு  உட்பட்டது,” என்று வான் ஜுனைடி கூறினார்.

ஏப்ரல் 30, 2015 அன்று சுமார் RM772,000 மதிப்புள்ள கெட்ஸ் குளோபல் பெர்ஹாடில் (முன்னர் KBES பெர்ஹாட்) 1,930,000 பங்குகளின் உரிமையை அவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அசாம் கவனத்தை ஈர்த்தார்.

கெட்ஸ் குளோபல் பெர்ஹாடில் அதன் பங்கு 31 மார்ச் 2016 இல் 1,029,500 ஆக குறைந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் அதன் மதிப்பு சுமார் RM340,000 ஆக இருந்தது.

அவர் மார்ச் 2016 இல் எக்செல் ஃபோர்ஸ் எம்எஸ்சி பெர்ஹாட்டில் 2,156,000 வாரண்டுகளை வைத்திருந்தார்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பங்குகளின் உரிமையானது ஒரு அரசு ஊழியராக இருந்த அவரது வருமானத்துடன் பொருந்துகிறதா அல்லது அதற்கு முரண்பாடாக உள்ளதா போன்ற  கேள்விகளை எழுப்பியுள்ளது.

பங்குகள் அவருடையது அல்ல, ஆனால் அவரது சகோதரரால் அவரது பெயரில் வாங்கப்பட்டவை என்று அசாம் கூறினார், இது அவரது வர்த்தகக் கணக்கை தவறாகப் பயன்படுத்துவது ஆகும். இது சார்பாக விசாரணை நடந்தது. ஆனால் அவர் குற்றம் செய்யவில்லையாம்.