மாணவனை  பிரம்பால் தாக்கிய மத போதகருக்கு 6 மாதம் சிறை

ஐந்து மாதத்திற்கு முன்னர் மத ஆசிரியர் ஒரு சிறுவனை அவர் சொன்னபடி பார்க்க மறுத்ததால், சிறுவனை தடியால்  கால்களில் அடித்து காயப்படுத்தியுள்ளார்.  அவர் அந்த 6 மாத சிறை தண்டனையை தொடங்யுள்ளார்.

11 வயதே ஆன சிறுவனை காயப்படுத்திய குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையின் கீழ், 28 வயதான அடிப் அப்த் ஹலீமுக்கு  ரிம.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஹனிபா ஃபரிகுல்லா தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேன்முறையீட்டு  நீதிபதி குழு, உயர் நீதிமன்ற சட்டத்தின்படி தண்டனை வழங்கவில்லை என்று கூறியது.

உயர்நீதிமன்ற நீதிபதி முடிவைத் திருத்தி, அதிப்பிற்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும், ரிம.4000 அபாரதம் விதித்திருந்தது. அதை அவர் உடனே செலுத்தி விட்டார்.

ஹனிபா அரசு தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்து, ” உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மீட்டெடுக்கவும்  மற்றும் அவரது தண்டனையை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.

நீதிபதி குழுவில் பி.ரவீந்திரன் மற்றும் ஹாசிம் ஹம்சா மற்ற நீதிபதிகளாக இருந்தனர்.

குற்றத்திற்கான தண்டனை கொள்கையை உயர் நீதிமன்றம் “கவனிக்கவில்லை” என்று ஹனிபா கூறினார்.

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட காயங்களை  நீதிபதி குழு கருத்தில் கொண்டதாகவும், அவர் அதிப்பின் பராமரிப்பில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

“தண்டனையை நிர்ணயிப்பதில் தணிப்பு காரணிகளையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளதாக ,” ஹனிபா கூறினார்.

இதற்கு முன்னதாக குற்றத்திற்கான தண்டனை அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரிம.2000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று துணை அரசு வழக்கறிஞர் தியா ஷாஸ்வானி இஸ்யான் முகமது அகிர் சமர்பித்தார்.

“உயர்நீதிமன்ற நீதிபதி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக அபராதம் விதித்து தன்னை தவறாக வழி நடத்தி உள்ளனர்” என்று அவர் கூறினார்.

அதிப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கைருல் அமீன் அப்துல்லா, தனது கட்சிகாரவேலை  இழந்து விட்டதாகவும் , சிறை தண்டனையை மாற்ற  வேண்டாம் என்று நீதிபதி குழுவை  வலியுறுத்தினார்.

அதிப்ப்புக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான அபராதத்தை அவரிடமே திருப்பி அளிக்க நீதிபதி குழு உத்தரவிட்டது.

விசாரணையில், ஆகஸ்ட் 16, 2017 அன்று கஜாங்கின் உலு லங்காட்டின் பண்டார்  செரி புத்ராவில் உள்ள ஒரு பள்ளியில் அந்த  சிறுவனின் கால்களில்  தடியால் அடித்ததாகக் கூறப்பட்டது.

(freemalaysiatoday)