திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூர் தினசரி தரைவழி VTL ஒதுக்கீடு அதிகரிப்பு

சிங்கப்பூருக்கும் மலே­சி­யா­வுக்­கும் இடையில், தரைவழி ‘விடி­எல்’ன் மூலம் பயணிப்பவர்களுக்காக  தினசரி ஒதுக்கீடு திங்கட்கிழமை முதல் உயர்த்தப்படும்.

இந்த கட்டண உயர்வு மூலம் தினமும் 3,420 பயணிகள் காஸ்வே வழியாக பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

சிங்கப்பூருக்கான நில ‘விடி­எல்’  திட்டத்தின் கீழ் தினசரி பயணிகள் ஒதுக்கீடு மார்ச் 14 முதல் 2,160ல் இருந்து 3,420 ஆக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வீ கா சியோங் நேற்று வெளியான அறிக்கையில் தெரிவித்தார்.

“முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகமானோர் இரு நாடுகளுக்கிடையே மற்ற பிரச்சனையின்றி பயணம் செய்ய இந்த நடவடிக்கை உதவும்”, என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 16 அன்று பயணிகளின் எண்ணிக்கை 50 விழுக்காட்டில் இருந்து 100 விழுக்காடாக அதிகரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான பேருந்து பயணச்சீட்டுகளின் விற்பனை நாளை தொடங்கும்.

மலேசியாவின் நியமிக்கப்பட்ட பேருந்து நடத்துனர் ஜொகூர் பாருவில் உள்ள லார்கின் முனையத்தில் இருந்து சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் வரை பேருந்தை இயக்குவார்.

பயணிகள் அனைவரும் கட்டாயம் தற்போது உள்ள கோவிட்-19 சோதனைகளை கடைபிடிக்க வேண்டும்.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியா எல்லையை மீண்டும் திறக்க உள்ளது, அதுவரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்று வீ கூறினார்.

-freemalaysiatoday