மலேசியாவின் சில பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவில் சுமத்ரா நிலநடுக்கம்

மலேசியாவின் சில பகுதிகளில் குறிப்பாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மெலக்கா மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சுமத்ரா கடற்பகுதியில் நேற்றுக் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று வானிலை மையம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.06 மணிக்கு,மலேசியாவில் காலை 5.06 மணிக்கு 21 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி கடலோர நகரமான பரியமனுக்கு மேற்கே 167 கிமீ தொலைவில் இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி 25 அன்று சுமத்ராவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், மேலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.

நகரம் முழுவதும் உள்ள கட்டிடங்களில் இருந்து அதிகாரிகளுக்கு பல அவசர அழைப்புகள் வந்தாலும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

-freemalaysiatoday