கோவிட்-19 (மார்ச் 13): 22,535 புதிய நேர்வுகள், 87 இறப்புகள்

நேற்று 22,535 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,823,571 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 320,877 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 9.5 சதவீதம் அதிகமாகும்.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (5,345)

கெடா (2,332)

ஜொகூர் (1,973)

நெகிரி செம்பிலான் (1,950)

கோலாழும்பூர் (1,594)

பினாங்கு (1,548)

சரவாக் (1,354)

பகாங் (1,352)

பேராக் (1,292)

திரங்கானு (1,039)

கிளந்தான் (1,005)

சபா (845)

மலாக்கா (563)

லாபுவான் (133)

புத்ராஜெயா (121)

பெர்லிஸ் (89)

கோவிட் -19 காரணமாக மேலும் 87 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 25 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த வாரத்தில், சராசரியாக 82.7 பேர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் சராசரியாக 56.9 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கோவிட்-19 இறப்புகள் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 33,807 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

இந்த மாதத்தில் 1,058 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒப்பிடுகையில், கடந்த மாதம் 771 இறப்புகளும் ஜனவரியில் 491 இறப்புகளும் இருந்தன.

அதிக இறப்புகள் உள்ள மாநிலம் ஜொகூர் (22), சிலாங்கூர் (18), பேராக் (10), பினாங்கு (6), கோலாழும்பூர் (6), பகாங் (5), கெடா (4), கிளந்தான் (4) , மலாக்கா (3), நெகிரி செம்பிலான் (3), திரங்கானு (3), சரவாக் (2) மற்றும் சபா (1).