தொக் மாட்-டின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்து – அன்வர் மூசா

கடந்த 16.3.2022 இரவு மகளிர், இளைஞர் மற்றும் புத்தேரி பிரிவுகளின் பேரவைகளைத் திறந்து வைத்து அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் ஆற்றிய உரை விவாதத்திற்காக பயன்படுத்தப்படலாம் என்று அம்னோ அமைச்சர் அன்வர் மூசா கூறினார்.

அரசாங்கத்தில் அம்னோவின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்ற முகமட்டின் அறிக்கையைக் குறிப்பிட்ட அந்த  தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர், “முகமட்டின் தனிப்பட்ட பார்வையாக இதை நான் பார்க்க விரும்புகிறேன்”, என்று கூறினார்.

“திருப்தியாக இல்லாதது எது என்பதை நான் அறிய விரும்புகிறேன்? இது எதை அடிப்படையாகக் கொண்டது, உண்மைகள் என்ன? கட்சியின் பணி எது அதிருப்தியற்றதாகக் கருதப்படுகிறது? இது தொக் மாட் அல்லது முஹமட் ஹாசனின் தனிப்பட்ட கருத்தாக நான் நினைக்கிறன்  என்று அவர் கூறினார்.

“தனிப்பட்ட முறையில், சில கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் சிலவற்றை நான் ஏற்கவில்லை. ஒருவேளை, இந்தப் பேச்சை நாளை நடைபெறும் பேரவைகளில் பெண்கள், இளைஞர் மற்றும் புத்தேரி பிரிவுகள் விவாதத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று கேடரே அம்னோ பிரிவுத் தலைவரான அன்வர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முகமட் தனது உரையில், அரசாங்கத்தில் அம்னோவின் செயல்பாடு எதிர்பார்த்த நம்பிக்கையை சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்றார். அந்த செயல்பாடுகள் முயற்சி இல்லாததால் அல்ல என்றார்.

15வது பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க சிறந்த இந்த நேரத்தில், தேர்தல் குறித்து வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது, ஏனெனில் இது பல்வேறு கருத்துக்களைத் தூண்டவும்,விவாதங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பளிக்கும்  என்று அன்வர் கூறினார்.

உயர்மட்ட விவாதங்களுக்குப் பிறகு விருப்பமான தேர்தல் தேதிகள் கட்சியின் யுத்தியாக இருக்க வேண்டும் என்றார்.

-freemalaysiatoday