நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் வேண்டும் – சபா முதல்வர்

சபா மற்றும் சரவாக் மாநிலங்களை பிரதிநிதிக்க நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெறுவதற்கான கோரிக்கையை சபா முதல்வர் ஹஜிஜி நூர் ஆதரிப்பதாக கூறினார்.

1963ல் சபாவும் சரவாக்கும் மலேசியா உருவாவதற்கு ஒப்புக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்களவையில் அந்த மாநிலங்களை பிரதிநிதிக்கும் நபர்களின் விகிதாசாரம் வலுவான வகையில்  இருக்க வேண்டும் என்பதாகும் என்று கூறினார்  ஹஜிஜி.

“நாங்கள் இதைத் கோருவோம். மக்களவையில் கிழக்கு மலேசிய மாநிலங்களின் பிரதிநிதிகள் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் நேற்று நடந்த  சபா மக்கள் கூட்டணி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

கூட்டத்தில் சபா மற்றும் சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சரான பார்ட்டி பெர்சது சபா தலைவர் மாக்சிமஸ் ஓங்கிலியும் கலந்துகொண்டார்.

சபா மற்றும் சரவாக்கின் அந்தந்த மாநில சட்டப் பேரவைகள் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வலுவான அழுத்தம் கொடுக்கும் வகையில் விவாதிப்பது சிறந்தது என்று ஓங்கிலி கூறினார்.

கடந்த முந்தினம், ஓங்கிலி, சபா மற்றும் சரவாக்கில் அதிக நாடாளுமன்ற இடங்களை உருவாக்கக் கோருபவர்கள் தங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

சபா மற்றும் சரவாக் எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையை விவாதித்து “மேல் நடவடிக்கைக்கு” தேர்தல் ஆணையத்திடம் எடுத்துச் செல்லவும் அவர் பரிந்துரைத்தார்.

இதற்கு முன்பு ஐந்து தொகுதியின் எம்.பி.க்கள், சபா மற்றும் சரவாக்கில் இருந்து குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதிகள் மக்களவையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னதாகவே விடுத்துள்ளனர்.

தற்போது, இவை மக்களவையில் உள்ள  222 இடங்களில் 56 இடங்களைப் பெற்றுள்ளன.  அந்த  56 நாடாளுமன்றத் தொகுதிகளில், சபா 25 ஐயும்   சரவாக் 31-ஐயும் கொண்டுள்ளன.

-freemalaysiatoday