பிரதமர்: குறைந்தபட்ச சம்பளம் RM1,500 மே 1 முதல் அமல்படுத்தப்படும்

மே 1 முதல் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் RM1,500 ஐ அமல்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

இருப்பினும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்படும், மேலும் பெரிய வருவாயைப் பெறாத சிறிய நிறுவனங்களுக்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை (SMEs), இஸ்மாயில் சப்ரி, புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை அவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் வழங்க முடியாது என்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கூறினார்.

எனவே, புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை வழங்க முடியாத SME களுக்கு அமல்படுத்துவதை ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

சிறு வணிகர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்றும் அம்னோ துணைத் தலைவர் கூறினார்.

கிராமத்தில் பணியாளர்களைக் கொண்ட உணவகம், கடை(ஸ்டால்) இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயப்படுத்துவது நியாயமானதல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

“எனவே குறைந்தபட்ச சம்பளம், ​அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்களுக்கானது,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.