ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையை நூர் ஹிஷாம் பாராட்டினார்

கோலாலம்பூரில் உள்ள துங்கு அஜிசா மருத்துவமனையில் ஒட்டிப்பிறந்து 17 நாட்களான இரட்டைக் குழந்தைகளைப் பிரித்தெடுத்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை முறையை சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா(Dr Noor Hisham Abdullah) பாராட்டியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஜகாரியா ஜஹாரி(Dr Zakaria Zahari) தலைமை தாங்கினார்.

” பிறந்து 17வது நாளில் 3.8 கிலோ எடையுள்ள ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்து சரித்திரம் படைத்த மருத்துவமனை துங்கு அசிசா மற்றும் டாக்டர் ஜகாரியா தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்று நூர் ஹிஷாம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குழந்தைகள் இப்போது Neonatal ICU, HTA வில் குணமடைந்து வருகின்றனர்” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது உடல் ரீதியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்.