சீனாவில் நடந்த விமான விபத்தில் மலேசியர்கள் இல்லை

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் MU5735(China Eastern Airlines flight), சீன விமானத்தின் சோகமான விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், அமைச்சின் கூற்றுப்படி, பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் குன்மிங், நான்னிங் மற்றும் குவாங்சோவில் உள்ள மலேசிய துணைத் தூதரகங்கள் விபத்து தொடர்பானவைகளை  உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

மலேசிய அரசாங்கத்தின் சார்பாக அமைச்சகம், சீனர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தது.

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் திங்கட்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது.

குன்மிங்கில்(Kunming) இருந்து குவாங்சூ(Guangzhou) நோக்கி புறப்பட்ட  Boeing737 ரக விமானம், வுஜோ(Wuzhou) நகரின் தெங்சியான்(Tengxian) மாவட்டத்தில் உள்ள மோலாங்(Molang) கிராமத்திற்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் பிற்பகல் 2.38 மணியளவில் விழுந்து நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.