RM650 மில்லியன் மதிப்பிலான Mass Rapid Transit (MRT) திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் MACC ஆல் மூன்று இயக்குநர்கள் மற்றும் இரண்டு முன்னாள் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
MACC ஆதாரங்களின்படி, புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் நேற்று வாக்குமூலம் அளிக்க வந்தபோது, 43 முதல் 63 வயதுக்குட்பட்ட ஒரு ‘டத்தோ’ உட்பட நான்கு ஆண்களும், ஒரு பெண்மணியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் திட்டத்திற்கான ஆலோசகராக நியமிக்கப்படுவதற்காக, இரண்டு முன்னாள் நிறுவன இயக்குநர்களும் மற்றொரு பொறியியல் நிறுவனத்திடம் இருந்து 27 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என்று தகவல் கிடைத்துள்ளன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று நிறுவன பணிப்பாளர்களும் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இரண்டு முன்னாள் இயக்குனர்கள் உடல்நலக் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படவில்லை.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று MACC ஆல் விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் ஷா வைரா அப்துல் ஹலீம்(Magistrate Shah Wira Abdul Halim), மூன்று நபர்களையும் மார்ச் 27 வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், இரண்டு முன்னாள் இயக்குனர்களும், விசாரணையில் உதவுவதற்காக ஒவ்வொரு நாளும் MACC தலைமையகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
லஞ்சம் கேட்டது மற்றும் வாங்கியது தொடர்பாக MACC சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.