KTM -இல் மில்லியன் கணக்கான ‘பணம் விரயம்’ குறித்து PAC (Public Accounts Committee) என்ற பொது கணக்கியல் குழு நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்.
இன்று வெளியிடப்பட்ட ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (LKAN) 2020 தொடர் 1இல், பல பட்டுவாடா நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, நாடாளுமன்ற பொதுக் கணக்கியல் குழு (PAC) சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மலாயா இரயில் சேவை நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) சேவையை மேம்படுத்தும் திட்டத்தில் RM2.81 மில்லியன் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது அந்த குழுவின் கவனத்தை ஈர்த்தது என்று PAC தலைவர் வோங் கா வோ கூறினார்.
அமைச்சகத்தின் கீழ் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த ஒரு திட்டத்தை நிர்வகிப்பதில் மொத்தமாக RM16.77 மில்லியன் வீணடிக்கப்பட்டது.
“உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகத்தின் கீழ் வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட திட்டம ஒன்றிலும் ஊழல் இருப்பதாக கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
துணை ஆடிட்டர் ஜெனரல் (செயல்திறன்) பாத்திமா ராமுஜி (Patimah Ramuji), துணை ஆடிட்டர் ஜெனரல் (நிதி) நோர் சல்வானி முஹம்மது (Nor Salwani Muhammad) மற்றும் துணை ஆடிட்டர் ஜெனரல் (அரசு நிறுவன மேலாண்மை) ரோஸ்லான் அபு பக்கர் (Roslan Abu Bakar) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
LKAN 2020 தொடர் 1 மத்திய அரசு அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் கூட்டாட்சி சட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
இது நிதி அறிக்கைகள் மற்றும் ஃபெடரல் ஏஜென்சிகளின் இணக்க தணிக்கை மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
முறையற்ற வகையில் அரசாங்க பனத்தை கொண்டு Lembaga Tabung Angkatan Tentera (LTAT) RM600.59 மில்லியன் ஈவுத்தொகையையாக செலுத்தியுள்ளதையும் அம்பலப்படுத்தியதாக வோங் கூறினார்.
கண்டறியப்பட்ட 682 தணிக்கைச் சிக்கல்களில், ஐந்து தண்டனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும், 677 திருத்தச் சிக்கல்களை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
“நாடாளும்ன்ற கூட்டத் தொடரில், ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு நாட்கள் கூடுவோம். தற்போதைய நாடாளுமன்ற கூட்டம் வியாழன் (மார்ச் 24) அன்று முடிவடையும் என்றும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எங்கள் அட்டவணையை PAC உருவாக்கும்,” என்றும் அவர் கூறினார்.