பெர்னாமா – நஜிப் அப்துல் ரசாக்கின் 1எம்டிபி விசாரணையில் இன்று அரசுத் தரப்பு, அந்த முன்னாள் பிரதமரின் எதிர் தரப்பு குழு, 13வது அரசுத் தரப்பு சாட்சியான முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குநர் இஸ்மி இஸ்மாயிலிடம் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்பியதாகக் கூறியது.
நஜிப்பின் வக்கீல் ஹரிஹரன் தாரா சிங்கின் கேள்விகள் பொருத்தமற்றவை என்று தலைமை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார், மேலும் நீதிமன்ற நேரத்தை மிச்சப்படுத்த அவர்கள் சிறப்பாக செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
“நான் எந்த சம்பந்தத்தையும் பார்க்கவில்லை, மிகவும் பொறுமையாக இருந்தேன். கேள்விகளுக்கு பொருத்தம் இருக்க வேண்டும்.”
“இவை முன்பே டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹல்மியிடம் (முன்னாள் 1MDB CEO) கேட்கப்பட்ட கேள்விகள். மீண்டும் கேட்பதில் அவசியமில்லை” என்று ஸ்ரீ ராம் (மேலே) கூறினார்.
குறுக்கு விசாரணையில், ஹரிஹரன் இஸ்மியிடம் ஷாரோல் மற்றும் முன்னாள் 1MDB நிர்வாக இயக்குனர் கேசி டாங் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையில் 1MDB நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய நபர்கள் ஷாரோல் மற்றும் டாங். இந்த இயக்குநர்கள், நிருவாக குழுவின் முடிவுக்கு அவர்கள் கீழ்ப்படியாதவர்கள் என்பதைக் காட்டுவது கேள்விகளின் பொருத்தம் என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.
ஷாரோலும் டாங்கும் வாரியத்தின் ஆணைக்கு எதிராகச் செயல்பட்டனர் என்பதை உறுதிப்படுத்த எதிர் தரப்பு விரும்புகிறது. நாங்கள் காட்ட விரும்பியதெல்லாம், இந்த இரண்டு நபர்களும் இந்த திட்டத்தை எவ்வாறு கையாண்டார்கள், மேலும் 1MDB குழுவின் நிலைப்பாடு பற்றி நாங்கள் கேட்டோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா, இஸ்மியிடம் அவருக்கு என்னதான் தெரியும் என்று கேட்டால் போதும் என்று சுட்டிக்காட்டினார்.
“நீங்கள் அவரிடம் எதைக் கேட்டாலும் அவருக்குத் தெரிந்திருந்தால் அல்லது அவருக்கு தனிப்பட்ட கருத்து இருந்தால், அது நல்லது. ஆனால் நீங்கள் அவரிடம் தொடுத்த பெரும்பாலான விஷயங்கள் அவருக்குத் தெரியாது, ”என்று நீதிபதி கூறினார்.
சுற்றி சுற்றி வருகிறீர்கள்
பதில் ஏற்கனவே ஆவணங்களில் உள்ளது என்றும், ஆவணங்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள உள்ளடக்கங்களை மீண்டும் கூறுவதற்குப் பதிலாக, இஸ்மி ஒப்புக்கொள்ள அல்லது உடன்படாமல் இருக்க அவர்களின் பரிந்துரைகளை நேரடியான முறையில் வைப்பதன் மூலம் எதிர் தரப்பு கேள்விகளை மாற்ற அமைக்க முடியும் என்றார் நீதிபதி.
“இப்படியே தொடர்ந்தால் எந்த முடிவும் வரப்போவதில்லை. விஷயங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியுமா?” என்று நீதிபதி கேட்டார்.
“உங்கள் வழக்காக நீங்கள் எதை வைக்க விரும்புகிறீர்களோ அதை அவருடன் (இஸ்மி) எதிர்கொள்ளுங்கள், மீதமுள்ளவற்றை உங்கள் சமர்ப்பிப்பிற்கு விட்டு விடுங்கள்” என்று நீதிபதி கூறினார்..
“இது மிகவும் சிக்கலான வழக்கு. சுற்றி சுற்றி தான் வரும். இந்த வழக்கில் பல ஆவணங்கள் மற்றும் பல பரிவர்த்தனைகள் ஈடுபட்டுள்ளன. இது நேரடியான வழக்கு அல்ல, ”என்று எதிர் தரப்பின் ஷபி அப்துல்லா ஆவேசமாக கூறினார்.
68 வயதான நஜிப், 1MDB நிதியில் இருந்து மொத்தம் RM2.3 பில்லியன் லஞ்சம் பெற தனது பதவியைப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், அதே தொகையில் பணமோசடி செய்ததாக 21 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.
விசாரணை தொடரும்.