கடந்த மூன்று ஆண்டுகளில் சபாவில் வேலையின்மை விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக மாநில சட்டசபையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
வேலையின்மை 2019ல் 5.8 விழுக்காட்டில் இருந்து 2020 இல் 8 விழுக்காடாகவும், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 9 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது என்று மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் யாகூப் கான் கூறினார், 2021ல் 184,200 வேலையற்றவர்களாக இருந்தனர்.
இது கவலையளிக்கும் போக்கு என்று கூறிய யாகூப், வேலையின்மையை குறைக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் கடுமையாக உழைத்து வருவதாக கூறினார்.
உதாரணமாக, சபா மற்றும் லபூவானில் இருந்து மொத்தம் 110,038 வேலை தேடுபவர்கள் MyFutureJobs எனும் இணையத்தின் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த இணையத்தில்இந்த ஆண்டு மார்ச் 22 வரை 43,229 காலியிடங்களை வழங்கியுள்ளது. அதே நேரத்தில், 2021 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 8,684 வேலை வாய்ப்புகள் உள்ளன, ”என்றும் அவர் கூறினார்.
வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான ஒரு புதிய வழிமுறையாக இளைஞர்களை யூ-டியூபர்கலாக ஆக மாற்றுவதற்கான வாய்ப்பு மற்றும் பயிற்சியளிப்பதை பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
“ஆம், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக மாறுவது வருமானத்தை ஈட்டுவதற்கான சமீபத்திய முறையாகும், எனவே இதையும் நாங்கள் கவனிப்போம்,” என்று அவர் தனது அமைச்சகம் தொடர்பான, நோராஸ்லினா ஆரிப்பின் ஆலோசனைக்கு பதிலளித்தார்.
“தேவை இருந்தால், இந்த விஷயத்தை எளிதாக்குவதற்கு நாங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவோம்.”
இளைஞர்களுக்கு யூடியூபர் ஆக பயிற்சி அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நோரஸ்லினா முன்னதாகவே மாநில அரசை வலியுறுத்தினார்.
“மில்லியன் கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். இது நமது இளைஞர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதோடு, நமது வாழ்க்கை முறை அல்லது சுற்றுலா போன்றவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியுமாகும்,” என்றார்.
-freemalaysiatoday