ஒரு விற்பனை ஓட்டுனர் (டெலிவரி ரைடர்) சங்கம் இன்று ஃபுட்பாண்டா அலுவலகத்தில் ஒரு மகஜரை சமர்ப்பித்தது. நியாயமற்ற முறையில் நிறுத்தப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அனுமதிக்குமாறு கோரியது.
குறைந்த ஆர்டர் ஏற்றுக்கொள்வதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்களும் (ரைடர்), தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டவர்கள் இதில் அடங்குவர் என்று Persatuan Penghantar P-Hailing Malaysia (Penghantar) கூறியது.
இன்று காலை கோலாலம்பூரில் உள்ள சவுத்கேட் வர்த்தக மையத்திற்கு வெளியே கூடியிருந்த 20 ஓட்டுனர்கள் குழு அந்த அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெஜுவாங் கட்சியின் நிருவாக குழு உறுப்பினர் முகமட் அக்மால் முகமாட் யுசோப் அந்த மறியலில் கலந்துகொண்டார்.
இந்த பிரச்சினைகளுக்கு ஃபுட்பாண்டாவிலிருந்து ஒரு வருடமாக எந்த தீர்வும் இல்லை என்பதால் ரைடர்ஸ் இதை நாடியதாக மலேசியாகினியிடம் கூறினார்.
எங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை, இது உரிமைக்கான போராட்டம் என்கிறார்கள்.
உதாரணமாக – பிரார்த்தனை அல்லது கனமழைக்காக அவர்கள் நிறுத்துகிறார்கள் என்றால் அதன்பின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்வுகளால் ரைடர்கள் தரவரிசையில் பின்தள்ளப்படும் அபாயமும் உள்ளது என்று அக்மல் கூறினார்.
“அவர்கள் தரமிறக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் குறைவான பணத்தைப் பெறுவார்கள், எனவே இது ரைடர்களுக்கு சாதகமாக இருக்காது,” என்றார்.
குழு மேலும் வலியுறுத்தியது:
மதிப்பீட்டு முறையின் உடனடி மறுஆய்வு – இது தற்போது ஹலால் அல்லாத ஆர்டர்களை மறுக்கும் முஸ்லிம் ரைடர்களை பாதிக்கிறது.
பயணித்த தூரத்திற்கு ஏற்ப சேவைக் கட்டணங்கள் எப்படி வழங்கப்படுகின்றன பற்றிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
பயன்பாட்டின் செயல்பாட்டு தூரம் பற்றிய மதிப்பாய்வு – இது Foodpanda ரைடர்களைக் கலந்தாலோசிக்காமல் விரிவாக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மதிப்பீட்டு முறை மூலம் வருவாய் தீர்மானிக்கப்படுகிறது
ரைடர் ரேட்டிங்குகளை மதிப்பாய்வு செய்ய அவர்கள் விரும்பியதற்குக் காரணம், அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது நேரடியாகப் பிணைந்திருப்பதால்தான் என்று அக்மல் விளக்கினார்.
தங்கள் கோரிக்கைகளை நிறுவனம் உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால், ஃபுட்பாண்டா மீது நடவடிக்கை எடுக்குமாறு அசோசியேஷன் மற்றும் பெஜுவாங் அரசாங்கத்திடம் முறையிடும் என்று Penghantar எச்சரித்தது.
மார்ச் 2021 அன்று நடந்த கூட்டத்தில் Penghantar இதற்கு முன்பு மனித வள அமைச்சகத்திடம் முறையிட்டதாக அக்மல் கூறினார். அதன் பயனாக, ஓட்டுனர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதற்காக ஃபுட்பாண்டாவுக்கு அமைச்சகம் ஒரு கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது சார்பாக கருத்துரைத்த ஒரு ரைடர், “எங்கள் வயிற்று பிரச்சனை இது, பணம் உள்ள நாடுதான், எங்கள் பிழைப்பு இப்படி என்றார்”.