மலாய் ஒற்றுமை என்பது மலேசிய அரசியலின் இறுதி இலக்கு என்று அறிவிக்கப்படுகிறது, ஆனால் இது ஒரு கட்டுக்கதை என்று கெரக் இன்டிபென்டன்ட் அமைப்பின் இணை நிறுவனர் தவ்பிக் இஸ்மாயில் கூறுகிறார்.
நேற்று ஒரு அறிக்கையில், “மலாய் மக்களின் மனதில்அப்படி மலாய் ஒற்றுமை என்று ஒன்றும் இல்லை” என்று கூறினார்.
“கிளந்தன் மலாய்காரர்களுக்கும் ஜோகூர் மலாய்காரர்களுக்கும் சிறிதும் பொதுவானது இல்லை, மதத்தைத் தவிர, இதில் வருத்தமளிப்பது என்னவென்றால், அதிகமான மலாய்க் கட்சிகளால் மதம் அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதால் இந்த பிளவு ஏற்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“அம்னோ-மலாய், மகாதீர்-பெர்சாத்து, அன்வர் இப்ராஹிம், நஜிப் ரசாக் மற்றும் தெங்கு ரசாலே போன்ற தலைமைகளை” சுட்டிக்காட்டி , நாட்டில் உள்ள பல்வேறு கூட்டணிகள் மலாய் ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்ததாக தவ்பிக் கூறுகிறார்.
“எதிர்கால கூட்டணிகள், கூட்டணியின் தத்துவத்திற்கு ஏற்ற மலாய் வகையையான மலாய்காரர்கள் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், என்பதுதான் எனது கருத்து”
அவர் மற்றும் கெராக்கின் இணை நிறுவனர் சித்தி காசிம் சித்தரிக்கும் மலாய் வகையை எதிர்கால கூட்டணி கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
“நாங்கள் இருவரும் மற்ற மலாய் தலைவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட பழைய அரசியலுக்கு ஒரு புதிய அணுகுமுறையை கொண்டு வருவோம். ஒருமைப்பாடு மற்றும் நேர்மையின் அடிப்படையில், இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களை கவலையடையச் செய்யும் பிற விஷயங்களைப் பற்றிய நேரடியான உரையாடலின் தேவையும் அடங்கும்” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஆய்வு செய்ய வருங்கால சந்ததியினருக்கான ஒரு ஆணையத்தை ஜெராக் முன்மொழிய விரும்புவதாக அவர் கூறினார்.
“இது எதிர்கால சந்ததியினர் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விஷயங்களில் நிகழ்காலத்தின் குறுகிய பார்வையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு உதவும்” என்று அவர் கூறினார்.
-freemalaysiatoday