நஜிப்பை ‘தேசிய அவமானம்’ என்ற பதாகையுடன் வரவேற்றதால் கைகலப்பு

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக இன்று பினாங்கில் உள்ள புக்கிட் மெர்தாஜாமில் (Bukit Mertajam) ஆர்ப்பாட்டம் நடத்திய சனநாயக செயல் கட்சியின் (சசெக)   உறுப்பினர்கள் குழுவை நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்கள் எதிர்கொண்டனர்.

சசெக-வின்  இளைஞர் மத்திய குழு உறுப்பினர் லிம் ஜெங் ஹான்(Lim Zheng Han) தலைமையிலான குழு, “தேசிய அவமானம்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தது.

எவ்வாறாயினும், நஜிப் அங்குள்ள மேடன் செலேரா Insa Dunia Food Court வருவதற்கு முன்பே இந்த  20 நிமிட போராட்டம் நீடித்தது.

அவர்களின் போராட்டம் நஜிப் ஆதரவாளர்களால் நிறுத்தப்பட்து.

லிம்-இன் கருத்துப்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நஜிப்பை தொடர்ந்து ஆதரிப்பதற்காக MCA உள்ளிட்ட ஆளும் கட்சிகளைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

“தேசிய அவமானம்” என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு முன்னாள் பிரதமராக, ஆளும் கட்சிகள் குறிப்பாக MCA இன்னும் அவரை ஆதரிக்கிறது, அவர்களுக்கு அரசியல் ஒழுக்கம் இல்லை.” என்றார் லிம்.

அரசியல் பிரச்சினைகளை விவாதிக்கவில்லை”

சசெக-வின் இளைஞர் பிரிவினரை “போஸ்கு” டி-ஷர்ட் அணிந்த மூன்று பேர் தடுத்து நிறுத்தினர்.

உணர்ச்சிவசப்பட்ட அவர்களில் ஒருவர் DAP உறுப்பினர்களைக் கடிந்துகொண்டார்: “இன்று அரசியல் எதுவும் இல்லை … நீங்கள் அரசியலைப் பற்றி பேச விரும்பினால், தூரமாகச் செல்லுங்கள்.” என்றார்.

இந்த நிகழ்வை “தனிப்பட்ட நிகழ்வு” என்று விவரித்தார் மற்றும் எதிர்ப்பாளர்களை வெளியேறுமாறு கூறினார்.

போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர், அவர்களின் பதாகைகள் நஜிப்பின் ஆதரவாளர்களால் எடுக்கப்பட்டன.

போராட்டம் முடிந்துவிட்டதாக லிம் வேதனையுடன் அறிவித்தார், மேலும் அவர்கள்  வெளியேறும் முன் “Tolak Najib”, “Tolak Pencuri” (திருடர்களை நிராகரி) என்று  கோசமிட்டவாறு வெலியேறினர்.

பின்னணியில் “போஸ்கு” பாடல்கள் ஒலிக்கின்றன

இந்த ஆட்சேப மறியலில் நஜிப்பின் ஆதரவாளர்கள் கைகலப்புடன்  தள்ளியதாகவும் இது சார்பாக போலிஸ் புகார் செய்ய ஆலோசித்து வருவதாகவும் மறியலில் பங்கெடுத்தவர் மலேசியாகினி யிடம் கூறினார்.

பின்னர் நஜிப் “போஸ்கு” பாடல் இசைக்கப்பட்டு அவரை வரவேற்க  சிங்க நடனத்துடன் வந்தார் .

உள்ளூர் சீன சமூகத்தின் ஆதரவைப் பெற நஜிப் பினாங்கில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

2வது பினாங்கு சர்வதேச வணிகம் மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்ற அவர், பினாங்கு சீனக் தலைவர்களையும் சந்தித்தார் .