ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும் கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத், ரோஸ்மாவுக்கு ஒரு பெரிய நகையை பரிசளிக்க விரும்புகிறார் என்பது மட்டுமே தங்களுக்குத் தெரியும் என்று அந்த தம்பதியினர் கூறினர்.
நேற்று பிற்பகல் அவர்களது மூன்று வழக்கறிஞர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில், ரோஸ்மாவும் நஜிப்பும், முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜியின் நியூயார்க் விசாரணையில் சமீபத்திய வெளிட்ட தகலுக்கு பதிலளித்தனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு 1MDB-இணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, மதிப்புமிக்க நியூயார்க் நகைக்கடை வியாபாரி லோரெய்ன் ஸ்வார்ட்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் ரோஸ்மாவுக்கு 22 காரட் வைர நெக்லஸை விற்க 23 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தைப் பெற்றதாகக் கூறினார்.
23 மில்லியன் அமெரிக்க டாலர் நகைகளுக்கான விலைப்பட்டியல் விசாரணையின் போதுக் காட்டப்பட்டது, ஆனால் உண்மையான நகை அதன் புகைப்படம் கூட காட்டப்படவில்லை.
“ஸ்வார்ட்ஸ் வழங்கிய ஆதாரம், 2018 இல் நஜிப் கூறிய வைர நெக்லஸ் ஷேக் மன்சூர் பரிசாக அளித்ததாகக் கூறியதற்கு முரணானது.” என்கிறது ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் கீதன் ராம் வின்சென்ட், ராஜீவன் நம்பியார் மற்றும் ரேசா ரஹீம் ஆகியோர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்
“எல்லா முக்கியமான நேரங்களிலும், ஷேக் மன்சூர் சயீத் என்ற ஐக்கிய அரபு எமிரேட் இளவரசர் எங்கள் தரப்பிணருக்கு இளஞ்சிவப்பு வைர நெக்லஸை பரிசாக வழங்க விரும்பினார் என்பது மட்டுமே அவருக்கும் அவரது கணவருக்கும் தெரியும்.
“இவர்கள் எந்த நேரத்திலும் இளஞ்சிவப்பு வைர நெக்லஸைக் கோரவில்லை மற்றும்/அல்லது வாங்க விரும்பவில்லை.”
“அதேபோல், கூறப்பட்ட நெக்லஸின் மதிப்பு ஒருபோதும் தெரியப்படுத்தப்படவில்லை” என்று அந்த மூன்று வழக்கறிஞர்கள் கூறினர்.
ரோஸ்மாவுக்கு நெக்லஸ் கிடைக்கவில்லை
ரோஸ்மா இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இது அதிகாரிகளால் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அது அவரது வசம் இல்லை என்பது தெளிவாகிறது.
“எங்கள் தரப்பினர் ரோஜர் என்ஜி விசாரணையில் ஜூரிக்கு தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல் பற்றிய தகவல் தெரியாது.
“கடைசியாக, இந்த விவகாரத்தை பரபரப்பானதாக்குவது எங்கள் தரப்பிணரையும் அவரது கணவரையும் அரசியல் ரீதியாக அவதூறு செய்யும் மற்றொரு மோசமான முயற்சி” என்றும்,,” என்றனர் வழக்கறிஞர்கள்.
முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி
மலேசிய நீதிமன்றங்களில், அவர் இரண்டு குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கிறார்.
ஒன்று சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கான RM1.25 பில்லியன் சூரிய கலப்பின ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் விசாரணை, இரண்டாவதாக, RM7 மில்லியன் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு வழக்கு.
SRC இன்டர்நேஷனல், அரசாங்க சொத்து நிதியமான 1MDB இன் முன்னாள் துணை நிறுவனமான SRC இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட RM42 மில்லியன் ஊழல் வழக்கில் அவரது கணவர் நஜிப் கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சருமான நஜிப் கூட , இந்தக் குற்றவியல் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நஜீப் மீதான RM2.28 பில்லியன் 1MDB ஊழல் வழக்கு, 1MDB தணிக்கை அறிக்கை விசாரணை மற்றும் சர்வதேச பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட RM6.6 பில்லியன் கிரிமினல் நம்பிக்கை மீறல் (CBT) போன்ற பல கிரிமினல் வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளன.