வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேசிய மொழி கட்டாயம் – தியோ பிரதமருக்கு நினைவூட்டுகிறார்

நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மலாய் மொழிக் கொள்கை குறித்த பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறிவிப்பால் வெளி நாட்டு  மாணவர்களும் கல்வியாளர்களும் திகைத்துப் போயுள்ளனர் என்று முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் துணைக் கல்வி அமைச்சர் கூறினார்.

தியோ நி சிங் கருத்துப்படி, வெளி நாட்டு  மாணவர்கள் மலாய் மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற கொள்கை 2014 முதல் உள்ளது. கல்வித்துறைக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றும் கூறினார்.

இந்த நடவடிக்கையானது கூட்டரசு அரசியலமைப்பின் 152 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பஹாசா மலேசியாவின் அந்தஸ்தை நிலைநிறுத்துவதாகக் கூறப்பட்டது

“இருப்பினும், இந்த திட்டம் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் தெளிவாக இல்லை, ஏனெனில் வெளிநாட்டு மாணவர்கள் ஏற்கனவே பொது படிப்பு பாடத்திட்டத்தின் கீழ் உள்ள ‘Bahasa Melayu Komunikasi’, என்ற கட்டாய பாடத்தை எடுக்க வேண்டும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், இஸ்மாயில் சப்ரி அம்னோ பொதுப்பேரவை உரையில், நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் பஹாசா மலேசியாவைக் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே பாடத்திட்டத்தில் உள்ளது

பிரதமரின்  அறிவிப்பு பல கல்வியாளர்களையும் வெளிநாட்டு மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தியோ கூறினார், ஏனெனில் அவர்களின் பாடத்திட்டத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள ஒன்றைக் கற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் கோருகிறது.

மலேசியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஜஹரோம் நைன் (Zaharom Naim), இஸ்மாயில் சப்ரியின் அறிவிப்பை அரசியலுக்காக சொல்லப்பட்டதாக கருதுகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்தபோது துணை அமைச்சராகப் பணியாற்றிய தியோ கூறுகையில், “பிரதமர் தனது வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை அல்லது உயர்கல்வி அமைச்சர் நோராய்னி அகமதுவிடம்(Noraini Ahmad) சரிபார்க்க வில்லை என்றார்.