பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் சமூக போராளி – பாமி

மே மாதம் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு முன்னாள் மாணவர் ஆர்வலர் ஃபஹ்மி ஜைனோல் (பாமி) போட்டியிடுகிறார்.

இந்த பிரிவின் தற்போதைய தலைவர் அக்மல் நசீர்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், பினாங் பிகேஆர் இளைஞர் தலைவரான ஃபஹ்மி, கட்சித் தேர்தலில் போட்டியிடும் அவரது அணி உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தினார்.

அவர்களில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் மற்றும் மலாக்கா இளைஞர் தலைவர் பிரசாந்த் குமார் ஆகியோர் இளைஞர் துணைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவார்கள்.

பத்து  எம்பி பி பிரபாகரனும் ஃபஹ்மியின் வரிசையில் இணைந்து  பிகேஆர் இளைஞர் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வரிசையில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று ஃபஹ்மி கூறினார்.

“இந்த பன்முகத்தன்மை அடித்தட்டு மற்றும் அனைத்து பின்னணியில் இருந்து வரும் இளம் மலேசியர்களின் இதயங்களை வெல்லும் என்று அவர் நம்புவதாக,” கூறினார்.

இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்களின் ஆதரவைப் பெறுதல் 15வது பொதுத்தேர்தலில் இளைஞர்கள் மற்றும் கட்சியின் இளைஞர் பிரிவினரின் பங்களிப்பை உயர்த்துதல் ,பிகேஆர் இளைஞர்களை வலுப்படுத்துதல்-  போன்ற மூன்று முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்தப்போவதாக ஃபஹ்மி கூறினார்.

இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடிய மற்றவர்களைப் பற்றிய கேள்விக்கு, முன்னாள் மாணவர் ஆர்வலர் ஆடம் அலியின் அவர் பங்கேற்பை வரவேற்பதாகவும் அவர்கள் ஆரோக்கியமான போட்டியை நடத்துவார்கள் என்று நம்புவதாகவும் ஃபஹ்மி கூறினார்.

-freemalaysiatoday