எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமராக இருந்த முஹிடின் யாசினை நேற்று சந்தித்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இது சார்பாக அவரிடம் வினவிய பொழுது அவருடன் உரையாடியது உண்மைதான் என்றார்.
ஆனால் அது அவருடன் இணைந்து அரசியல் நடத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். அதோடு கடந்த 2020-இல் முதுகில் குத்திய ஒருவருடன் எப்படி இணைந்து அரசியல் நடத்துவது என்று வினவினார் அன்வார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதை முன்னிட்டு தற்போது பலவகையான கூட்டணிகள் அமைப்பதற்காக கட்சிகள் பேரம் பேசி வருகின்றனர்.
அந்த நிலையில் அன்வார் இப்ராஹிமின் சமூக நீதி கட்சி, ஹராப்பான் கூட்டணியின் கீழ் எவ்வகையான கூட்டணியில் இறங்கும் என்ற வினா இருந்துவருகிறது.
இதற்கிடையில் தற்போது நடக்கும் சமூக நீதி கட்சியின், கட்சி தேர்தலில் துணைத்தலைவர் போட்டிக்கு பலத்த போராட்டம் நடந்து வருகிறது இதனால் கட்சி பிளவு படக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்று வினவிய பொழுது அன்வார் இது ஒரு சுமூகமான கட்சி தேர்தல், முன்பு போல் அல்ல என்று கூறினார்.