‘விரக்தியடைந்த’ முஹிடினுடன் அம்னோ பணியாற்ற விரும்புகிறதா? – ஜாஹிட்

அம்னோவின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அம்னோவை சேர்ந்த எவரேனும் பெர்சத்துவில் நம்பிக்கை இருந்தால் அதன் தலைவர் முகைதின் யாசினின் “விரக்தியடைந்த’ ” அரசியல் நடவடிக்கையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என கூறினார்.

“அம்னோவில் இன்னும் பெர்சதுவுடன் ஒத்துழைக்க, நம்ப, மற்றும் பாதுகாக்க விரும்பும் எவருக்கும், அவர்கள் இந்த பெரிக்காத்தான்  நேஷனல் மற்றும் பெர்சத்துவின் தலைவர், மீண்டும் பிரதம மந்திரி ஆக ஆசைப்படுவதை மதிப்பீடு செய்ய வேண்டும்.

“இந்த வகையான கட்சியுடன் நாம் இணைந்து பணியாற்ற விரும்புகிறோமா?” என இன்று அவர் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

முஹிடின், அவருடன் பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்த பெஜுவாங் தலைவர் டாக்டர் மகதீர் முகமட் மற்றும் பல அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவித்ததை அடுத்து ஜாஹிட்டின் இந்த அறிவுரை வெளியாகியுள்ளது.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் முஹிடினை சந்தித்ததை ஒப்புக்கொண்டார், ஆனால் அது வெறும் “சாதாரண சந்திப்பு” என்று நிராகரித்தார்.

அம்னோ முழுமையடையவில்லை இருப்பினும்,அதிகாரத்தில் இருப்பதற்காக எல்லாவற்றையும் செய்யத் துடிக்கவில்லை என்று ஜாஹிட் கூறினார்.

“நாங்கள் விரக்தியடையவில்லை என்றும் எங்கள் கொள்கைகளை அதிகாரத்திற்காக விற்கவில்லை என்றும் ,” அவர் கூறினார்.

-freemalaysiatoday