முஹிடின் புதிய கூட்டாளிகளைத் தேடுவது குறித்து அம்னோவை ஜாஹிட் எச்சரிக்கிறார்

இன்று பெர்சத்து மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஆகியவற்றுடன் கூட்டணி சேர விரும்பும்  கட்சி உறுப்பினர்கள், முஹிடின் பற்றிய சமீபத்தில் கசிந்த  வெளிப்பாடுகளை கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்கிரார், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.

ஜாஹித் (மேலே, இடது) பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, முஹிடின்  மீது குற்றம் சாட்டியதாகவும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வர சதி செய்வதாகவும் கூறினார். அந்த பெர்சத்து தலைவர் மீண்டும் பிரதம மந்திரியாக வர விரும்புவதாகவும், பெஜுவாங்குடன் ஒத்துழைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

“பெர்சத்து ஒரு கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று நாம் நினைத்திருக்கலாம். அவர்கள் சுயநலத்திற்காக மட்டுமே செயல்படுவதாகத் தெரிகிறது, “என்று ஜாஹிட் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதினார்.

மேலும், சமீப காலமாக முஹிடின், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் வாரிசான் தலைவர் முகமது ஷாஃபி அப்டல் ஆகியோரையும் அணுகியதாக ஜாஹித் கூறினார்.

“அம்னோவில் இன்னும் பெர்சத்துவுடன் ஒத்துழைக்க விரும்புகிற, நம்புகிற அல்லது இன்னும் அதை தற்காத்து  வருபவர்களுக்கு, PN மற்றும் பெர்சத்து தலைவரின் நடவடிக்கைகள் மற்றும் நடத்தைகளை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு மிகவும் ஆசைப்படுகிறார்.”

“அப்படிப்பட்ட கட்சிக்கு நாம் ஒத்துழைக்க வேண்டுமா?” என்று ஜாஹித் கேட்டார். “அம்னோ முழுமையானது அல்ல, ஆனால்  அவநம்பிக்கையானவர்களும் அல்ல. அதிகாரத்திற்காக கொள்கைகளை நாங்கள் கைவிடவில்லை.” என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அடுத்த பொதுத் தேர்தலுக்கான சாத்தியமான உடன்படிக்கையில் மற்ற கட்சித் தலைவர்களை அணுகுவதற்கான முன்முயற்சியை எடுத்ததாக முஹிடின் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தில் இருந்து பெர்சத்து வெளியேறிய பிறகு, மார்ச் 1, 2020 அன்று முஹிடின் பிரதமரானார். ஜாஹிட் உட்பட பல அம்னோ MP க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, ஆகஸ்ட் 16, 2021 அன்று அவர் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21, 2021 அன்று பிரதமராக பதவியேற்ற அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புக்கு முஹிடினும்  பெர்சத்துவும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

2021 இல் – முஹிடின் தலைமையிலான PN கூட்டணி, சமீபத்தில் முடிவடைந்த மலாக்கா மற்றும் ஜொகூர் தேர்தலின் போது முறையே 24.31% மற்றும் 24.04% வாக்குகளை பெற்றது.