மருத்துவத்தில் மரிஜுவானா – கைரி வரவேற்கிறார்

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மருத்துவத்தில் மரிஜுவானாவின் பயன்பாடு குறித்த மருத்துவ ஆய்வுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆதாரத்தின் அடிப்படையில் இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு முழுமையான சமர்ப்பிப்புகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

“மரிஜுவானாவின் மருத்துவ பயன்பாடு குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன”.

“சுகாதார அமைச்சகம் சான்றுகள் அடிப்படையிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் நிலையானது. அதனால்தான் மருத்துவ நோக்கங்களுக்காக CBD (cannabidiol) பயன்படுத்துவதற்கான மருத்துவ ஆய்வுகளை நாங்கள் வரவேற்றுள்ளோம்,” என்று கைரி இன்று ட்வீட் செய்தார்.

தனது அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனங்களின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனம் இதை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.

மருத்துவத்தில் CBD ஐப் பயன்படுத்துவதற்கான தொழில்துறை மற்றும் கல்வியாளர்களின் ஆராய்ச்சியை MOH வரவேற்கிறது. நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952-இன் கீழ் மருத்துவ மரிஜுவானா இன்னும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.

இருப்பினும், மலேசியாவில் கஞ்சா மற்றும் அதன் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 234, நச்சுகள் சட்டம் 1952 (சட்டம் 366) மற்றும் மருந்துகள் விற்பனை சட்டம் 1952 (சட்டம் 368) ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் தற்போதைய சட்டம் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா சார்புகொண்ட  தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும் நுகர்வதையும் தடுக்காது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கொள்கை மாற்றங்களாகக் கருதப்பட்ட, ஆனால் புதிய சட்டங்களாக செயல்படுத்தப்படாத மூன்று தனித்தனி ஆனால் தொடர்புடைய சிக்கல்கள் உள்ளன.

முதலாவது மருத்துவ மரிஜுவானாவின் சட்டப்பூர்வ நிலை பற்றிய பிரச்சினை

இரண்டாவதாக, முன்னாள் சுகாதார அமைச்சர் ஜுல்கிப்லி (Dzulkefly Ahmed) முன்மொழிந்தபடி, போதைப்பொருளுக்கு  அடிமையானவர்களை, குற்றவாளிகளாக பார்க்காமல் அவர்களை நோயாளிகளாக நடத்தப்படுவதற்காக, சிறிய அளவிலான போதைப்பொருட்களை வைத்திருப்பதை குற்றமற்றதாக்குவதை நீக்க வேண்டும்.

மூன்றாவதாக, சட்டம் 234 கீழ் உள்ள கட்டாய மரணதட்டனை சரத்து நீக்கப்பட வேண்டும்.