இரண்டு   கோவிட்-19 சோதனைக் கருவிகளுக்கான அங்கீகாரம் ரத்து

மருத்துவ சாதன ஆணையம் (MDA) இரண்டு வகையான  கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளின் செயல்திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டவில்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, அவற்றின் ஒப்புதலை ரத்து செய்தது.

இன்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கருத்துப்படி, பொதுமக்களிடமிருந்து பெற்ற புகார்ககளின் அடிப்படையில்  MDA இதுவரை சந்தையில்உள்ள  22 சோதனைக் கருவிகளை பரிசோதித்துள்ளது.

“இதுவரை, அவற்றில் 12  இன் முடிவுகள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 2  கருவிகள் தேவையான செயல்திறனை எட்டவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு கிட்களுக்கான அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது, ”என்று அவர் இன்று ட்விட்டரில் தெரிவித்தார்.

அவை, அன்ஹுய் டீப்ப்ளூ மெடிக்கல் டெக்னாலஜி(Anhui Deepblue Medical Technology Co) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விஸ்பிளூ(Wizblue) பிராண்ட் மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட ஜியாமென் விஸ் பயோடெக் கோ(Xiamen Wiz Biotech Co) ஆல் தயாரிக்கப்பட்ட விஸ்பயோடெக் (Wizbiotech)  ஆகிய முத்திரைகள் கொண்ட இரண்டு கருவிகளாகும்.

அவை மலேசியாவில் முறையே Innovac Technology Sdn Bhd மற்றும் Conan Medical Technology Bhd ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்டன.

MDA இன் இணையதளம் தற்போது 128 கோவிட்-19 சுய-பரிசோதனை கிட் பிராண்டுகள் உள்ளன, அவை மலேசிய சந்தைக்கு நிபந்தனையுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 17 அன்று, சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டும் கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளைப் பற்றிய பொது புகார்களை விசாரிக்க MDA க்கு உத்தரவிட்டதாக கைரி அறிவித்தார்.

அதற்கு முன்னதாக, சுய சோதனை கருவிகளின் செயல்திறன் குறித்து பொதுமக்களின் புகார்களைக் கோருவதற்கான இயங்கலை படிவத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.