போர்ட் டிக்சன் எம்.பி.யான அன்வர் இப்ராகிம் 2022 மக்கள் நீதி கட்சி (மநீக) அதேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற பின்னர், எதிர்பார்த்தபடி 2022-2025 காலத்திற்கான தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
மநீக -யின்பொதுச்செயலாளர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) இதை உறுதிப்படுத்தினார், இது மநீக அடிமட்ட மக்கள் அன்வார் மீதுள்ள மிகுந்த மரியாதையை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.
கட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு அன்வர் மட்டுமே முன்னிறுத்தப்பட்டார்.
மநீக தேர்தல் 2022க்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கிளை அளவில் நடைபெற்றது, அதே நேரத்தில் கட்சியின் உயர் பதவிகளுக்கான நியமனம் நேற்று நடைபெற்றது.
இதற்கிடையில், நான்கு உதவி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட 18 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்,
மநீக தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறுகையில் துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு வேட்புமனுக்கள் மட்டுமே பெறப்பட்டன – அதாவது முன்னாள் பாண்டன் எம்பி ரபிசி ரம்லி மற்றும் சைபுதீன் என்றார்.
வேட்பாளர்களின் இறுதி பட்டியல் ஏப்ரல் 20 அன்று காட்சிக்கு வைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
முதல் முறையாக, பிப்ரவரி 28 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அடில் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் இருப்பவர்களுடன் கட்சி தேர்தல்கள் கலப்பின முறையில் நடத்தப்படும்.
நேரடியாக வாக்களிப்பவர்கள் மே 13 முதல் 17 வரையிலும், இயங்கலை வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மே 18 முதல் 20 வரையிலும் நடைபெறும்.