2017 ஆம் ஆண்டில் எட்டு சைக்கிள் ஓட்டுநர்களின் மரணத்திற்கு, பொறுப்பற்ற வகையில் வாகனம் ஓட்டியதால்தான் என்று சாம் கே டிங்-க்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் வழங்கிய ஆறு ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
அவரது வழக்கறிஞர் பைசல் மொக்தார், பிரதிவாதி நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வார் என்று கூறினார்.
“நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாங்கள் விவாதித்துள்ளோம். இன்று ஆவணங்களைத் தயாரித்து நாளை மேல்முறையீடு செய்ய முடியும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கும் வகையில் பிரதிவாதி சாமி-ற்காக பிரார்த்தனை செய்யுமாறும் பைசல் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு சாம் “மிகவும் அமைதியாக ” தோன்றினார் என்று அவர் கூறினார்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அபு பக்கர் கட்டார்(Abu Bakar Katar), கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதால் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறினார்.
“தனது தற்காப்பில், சம்பவ இடத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களின் குழுவை தான் பார்க்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கிவிட்டு வேகமாகச் சென்ற மற்றொரு வாகனம் இருப்பதாகவும் அவர் கூறினார்”. இந்த பதிப்பு அரசுத் தரப்பு வழக்கின் போது பிரதிவாதியால் ஒருபோதும் எழுப்பப்படவில்லை.
” பிரதிவாதி மிகவும் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும், இருள் மற்றும் குறைந்த தெரிவுநிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சாமு-க்கு(Sam) RM6,000 அபராதமும் விதிக்கப்பட்டது, மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பிப்ரவரி 18, 2017 அன்று, அதிகாலை 3 மணியளவில் சாம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் எட்டு சைக்கிள் ஓட்டுநர்கள் இறந்தனர், மேலும் இருவர் படுகாயமடைந்தனர், மேலும் ஆறு பேர் லேசான காயமடைந்தனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் முகமட் அஸ்ரி டேனிஷ் சுல்கேப்லி, 14(Mohamad Azrie Danish Zulkefli, 14); முகமது ஷாருல் இஸ்வான் அசுரைமி, 14 (Muhamad Shahrul Izzwan Azzuraimie, 14) ; முஹம்மது ஃபிர்தாஸ் டேனிஷ் முகமது அசார், 16(Muhammad Firdauz Danish Mohd Azhar, 16); ஃபௌசன் ஹல்மிஜான், 13 (Fauzan Halmijan, 13); முகமது அசார் அமீர், 16 (Mohamad Azhar Amir, 16); முகமது ஹரித் இஸ்கந்தர் அப்துல்லா, 14 (Muhammad Harith Iskandar Abdullah, 14); முஹம்மது ஷாருல் நிஜாம் மருதின், 14 (Muhammad Shahrul Nizam Marudin, 14) மற்றும் ஹைசாத் கஸ்ரின், 16 (Haizad Kasrin, 16).