சமீபத்திய காவலில் வைக்கப்பட்டவர் மரணத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு சிறைச்சாலையிலும் மருத்துவப் பிரிவை அமைப்பது உட்பட, சிறை அமைப்பின் சீர்திருத்தங்களுக்கு மூடா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் அறிக்கையை மேற்கோள் காட்டி, கட்சியின் தகவல் தலைவர் லுக்மான் லாங், மலேசியாவில் உள்ள 400 சிறைச்சாலைகளில் ஐந்தில் மட்டுமே இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அனைத்து கைதிகளின் நலனையும் பாதுகாக்க இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது” என்று அவர் நேற்றையா அறிக்கையில் கூறினார்.
லுக்மான், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக காவலில் வைக்கப்பட்ட மரணங்களை விசாரிக்க தனிப்பட்ட அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
தனிப்பட்ட காவலர்களின் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை ஐபிசிஎம்சி விரைவாக நிறுவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐபிசிஎம்சி-யை ஒரு மிரட்டலாக பார்க்காமல் அது காவல்துறையின் நேர்மையை வலுப்படுத்துவதற்கான முதல் படியாகக் கருதப்பட வேண்டும் என்றார்.
காவலில் ஏற்படிம் மரணங்களுக்கு உடனடியாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும், அப்படி செய்வதன் வழி பல அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற இயலும்,” என்று அவர் கூறினார்.
சமீபத்திய காவலில் மிருந்தவரின் மரணம் – இந்த ஆண்டில் ஏற்பட்ட 15 வது நிகழ்வாகும். இது காஜாங் போலீஸ் காவலில் இருந்த நபர் சம்பந்தப்பட்டது.
பணியில் இருந்த காவலாளி, அந்த மாண்ட 45 வயது கைதி வலிப்பு அவதிப்பட்டதை கவனித்துள்ளார்.
கடந்த மார்ச் 21-இல், பகாங்கில் உள்ள ஒரு லாக்-அப்பில் 42 வயதான கைதி ஒருவர் “கோவிட்-19 உடன் நுரையீரல் காசநோயுடன் கூடிய கடுமையான நுரையீரல் தொற்று” காரணமாக இறந்தார்.
-freemalaysiatoday