சபா மற்றும் சரவாக் விமான கட்டண உயர்விற்கு “அமைச்சர் செவி சாய்க்கவில்லை” – எதிர்க்கட்சி சாடல்

ரமடான் பண்டிகை  காலத்தில் தீபகற்பத்தில் இருந்து கிழக்கு மலேசியா பயணம் செய்ய  விமான பயணசீட்டுகளின்  அதிக விலை உயர்வை குறித்து போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் “செவி சாய்க்காமல்” இருப்பதாக எதிர்க்கட்சி அமைச்சர் சாடியுள்ளார்.

கோட்டா கினாபாலு எம்.பி. சான் ஃபூங் ஹின், ஆண்டுதோறும்  பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிப்பதைக் கணிக்கக் கூடியதாக இருந்தபோதிலும், ​​கூடுதல் விமானங்களுக்கு ஏற்பாடு செய்யத் தவறியதற்காக வீ யின் செயல் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.

“ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சபா மாநில அரசாங்கத் தலைவர்கள் சபாவிற்குள்ளும், சபா மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கும் இடையேயான விமானங்களுக்கான விமானக் கட்டணத்தை உயர்த்துவதை தடை செய்வதற்காக முன்வந்துள்ளனர்” என்று அவர் கூறினார், சபா முதல்வர் ஹாஜிஜி நூர், அவரது துணைப் பங் மொக்தார் ராடின் மற்றும் மாநில முன்னாள் உறுப்பினர் ஜாஃப்ரி அரிபின் என்று இவர்களை குறிப்பிட்டார்.

“கூட்டங்களுக்குப் பின்  கூட்டங்களை நடத்துவதைத் தவிர,மத்திய அரசு சபா மக்களுக்கு பயனளிக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை என்பதுதான்   மில்லியன் டாலர் கேள்வி?”

“வீ இது அவருடைய வேலையல்ல என்பது போல் முற்றிலும் அமைதியாக இருப்பது போல் தெரிகிறது? கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணிப்பதும், கவனிக்காமல் இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DAP இன் சான், சாதாரண நாட்களில் விமானக் கட்டணங்களின் சராசரி விலையைப் பாதிக்கும் என்பதால், உச்சவரம்பு விலையை நிர்ணயிப்பது பற்றி புத்ராஜெயா தலையிடுவதை தான் விரும்பவில்லை என்று கூறினார்.

ஒரு விமானத்தில் சில இருக்கைகள் இருக்கும் போது மட்டுமே டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்றும், அதிக தேவை இருக்கும் போது விலை இயல்பாகவே அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

“பண்டிகைக் காலங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே  இதுபோன்ற விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒரே வழி. எனவே, விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த கூடுதல் விமானங்களை விமான நிறுவனங்கள் ஏற்பாடு செய்யுமாறு வீ க்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

சபாவுக்கான விமானங்கள் ரிம4,000 ஆக அதிகரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது, தவாவுக்கான விமானம் லண்டனுக்கு ஒரு டிக்கெட்டை விட அதிகமாக செலவாக உள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியாவின் இணையதளங்களில் ஹரி ராயாவுக்கு முன் ஒரு வழி விமானங்கள் குறித்த சோதனையில், KLIA விலிருந்து Tawau க்கு பயணம் செய்ய சாதாரண நாட்களில் சாதாரண பயணச்சீட்டு ரிம200 மற்றும் சிறப்பு பயணச்சீட்டுக்கு ரிம1,000 செலவாகும் என்று அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், பண்டிகைக் காலத்தில் தவாவுக்கான ஒருவழி விமானங்கள் சாதாரண பயணச்சீட்டு  ரிம1,892 மற்றும் ரிம3,781 ஆக உயர்ந்துள்ளது – லண்டனுக்கு ஒரு வழி விமானம் பொதுவாக ரிம2,300 செலவாகும்.

-freemalaysiatoday