நேற்று அதிகாலை கோலாலம்பூரில் ஸ்தாபாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 18வது மாடியில் இருந்து நான்கு வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
அதிகாலை 2 மணியளவில் பொதுமக்களால் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக வங்சா மஜு மாவட்ட காவல்துறை தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
சிறுமியின் தாய் வெளியில் இருந்ததாகவும், குழந்தை குடியிருப்பில் உள்ள தனது அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். “மற்ற குடியிருப்பாளர்கள் வேறொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள், குழந்தை மேற்பார்வையின்றி விடப்பட்டாள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.”
அந்த இடத்தில் இருந்த உதவி மருத்துவ அதிகாரியால் சிறுமி இறந்துவிட்டதை அறிவித்ததாகவும், உடலை பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆஷாரி கூறினார்.
குழந்தைச் சட்டத்தின் கீழ் அலட்சியபோக்கு மற்றும் தனித்து விடப்பட்டது என்ற கோனத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, இதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரிம20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
-freemalaysiatoday