வாடகை ஊர்தி ஓட்டுனரின் தொண்டையை அறுத்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் (Beh Eng Lai) கூறுகையில், கோலாலம்பூரில் உள்ள ஜாலான் கோவில் ஹிலிர்(Jalan Kovil Hilir), அருகில் நேற்று அதிகாலை 2.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.
63 வயதான ஓட்டுநர், மைகார் (MyCar) செயலியைப் பயன்படுத்தி, சாகில், தங்காக், ஜொகூரில் இருந்து கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றார்.
“இருப்பினும், அந்த நபர் தன்னிடம் பணம் இல்லாததால் அதற்கான ரிம 400 கட்டணத்தை செலுத்த மறுத்துவிட்டார். அதோடு அந்தச் சிறுமியை, போலிஸ் நிலையத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்.
பயத்தின் காரணமாக, அந்தச் சிறுமி பாதிக்கப்பட்டவரை மடிப்பு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். அதோடு பாதிக்கப்பட்டவரின் காரில் தான் பயன்படுத்திய மடிப்பு கத்தியையும் விட்டுவிட்டார்.
உதவிக்காக ஓட்டுநர் செந்தூல் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விசாரணைகளின் அடிப்படையில், அந்தச் சிறுமி நேற்று மாலை 4.55 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மேபேங் ஜின்ஜாங் கிளைக்கு(Maybank Jinjang) முன்பாக கைது செய்யப்பட்டதாக பெஹ்(Beh) கூறினார்.
“கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு ( அந்தச் சிறுமி) முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, சந்தேகநபரிடம் இருந்த கைத்தொலைபேசியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது சவுக்கடி அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.