சேம நிதி பணத்தில் RM10,000 எடுக்கலாம், அது ஏப்ரல் 18 முதல் இயலும் என்கிறார் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் (Tengku Zafrul Abdul Aziz).
“எனது சமூக ஊடகங்களில் ‘YB., EPF திரும்பப் பெறுவதை முன்னதாகவே வழங்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முடியும் அதான் என் பதில்.
“உங்களது குரல் எனக்குக் கேட்கிறது. எனவே, EPF உடன் விவாதித்த பிறகு, EPF இல் பணத்தை எடுப்பதை ஏப்ரல் 20, 2022 க்குப் பதிலாக ஏப்ரல் 18, 2022 முதல் எடுக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று Zafrul ( மேலே ) தனது Facebook பக்கத்தில் இன்று தெரிவித்தார்.
இந்த ஏற்பாடு இந்த ஆண்டு ஐதில்பித்ரி கொண்டாட்த்தை டஉற்சாகப்படுத்தும் மற்றும் மக்களின் சுமையை குறைக்கும் என்று நம்புவதாக கூறினார்.
55 வயதுக்குட்பட்ட EPF உறுப்பினர்களுக்கு இறுதியாக RM10,000 வரை எடுக்கலாம் என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.
பொருளாதாரத்தில் இன்னும் பாதிக்கப்பட்டு, வருமானத்தை இழந்து, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் மக்கள் மத்தியில் விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்பு தெரிவித்தார்.
திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை திறக்கப்பட்டது மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை சிறப்பு திரும்பப் பெறும் போர்ட்டலில் சரிபார்க்கலாம் .https://pengeluarankhas.kwsp.gov.my/.