விமான கட்டணம் 30% வரை குறைக்கப்பட்டுள்ளது – போக்குவரத்து அமைச்சு

பண்டிகைக் காலத்தில் கட்டணங்களைக் குறைக்க மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் மாவ்காம் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, விமான பயணசீட்டுகளின் விலைகள் 30விழுக்காடுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் இஷாம் இஷாக் கூறுகையில், குறைக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து ஆராய்ந்து ஆணையம் விரிவான அறிக்கையை வெளியிடும் என்றார்.

“சிலர் விமான டிக்கெட்டுகளின் விலைகள் 70விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் கட்டணத்தை முடிந்தவரை குறைத்துள்ளோம். இன்று காலை நிலவரப்படி விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளன.

நேற்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இந்த பண்டிகைக் காலத்தில் சபா மற்றும் சரவாக்கிற்கான விமான கட்டணங்களின் விலையை அதிக அளவில் உயர்த்தி அதிக லாபம் ஈட்ட வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு நினைவூட்டினார்.

ஒரு விமான நிறுவனத்தின் இணையதளத்தில் காட்டப்படும் விலையானது சபா அல்லது சரவாக்கிற்கு திரும்பும் விமானங்களுக்கு ரிம2,000 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது, அதே பயணத்திற்கான வழக்கமான விலையான ரிம300 உடன் ஒப்பிடப்பட்டது வெளியானது, அதன்பிறகு சபா மற்றும் சரவாக்கிற்கான விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் பொது மக்களின் விமர்சனதிற்கு ஆளானது.

இதற்கிடையில், ரயில்வே துறைக்கான சிறந்த மையமாக, தேசிய ரயில் சிறப்பு மையத்தை (NRCOE) நிறுவுவதற்கான முன்மொழிவைக் குறிப்பிட்ட இஷாம் இந்த விவகாரம் விரைவில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

நாட்டின் இரயில் போக்குவரத்துத் துறையில் இன்னும் உள்ளூர் நிபுணத்துவம் இல்லை என்றும், உள்ளூர் ரயில் தொழில் வளர்ச்சி மலேசிய தரநிலைத் தேவைகளைப் பின்பற்றுவதை NRCOE உறுதிசெய்யும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

-freemalaysiatoday