குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறை படுத்துவதில் அரசாங்கம் படுதோல்வி

12வது மலேசியத் திட்டத்தில் (12MP) நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, 2025க்குள்  உயர் வருமான நிலையை அடைவதற்கு, மலேசியாவின் புதிய குறைந்தபட்ச ஊதியம் அனைத்துத் துறைகளிலும், விதிவிலக்குகள் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றனர்.

ஆட்சேபனைகள், ஒத்திவைப்புக்கான அழைப்புகள் அல்லது விலக்குகளுக்கான மேல்முறையீடுகள் போன்றவை குறைந்த சம்பள கொள்கையை மேலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவை என்று தொழிலாளர் சட்ட சீர்திருத்தக் கூட்டணியின் தலைவர்  என். கோபால் கிஷ்னம் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் சுமார் 600,000 நடுத்தர வருமானம் (எம் 40) கொண்ட குடும்பங்கள் கீழ்மட்ட 40% வருமான வகைக்குள் வரும்போது, ​​வருமான ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கிஷ்னம் கூறினார்.

இது B40 ஐ B60 ஆக உயர்த்தி  வருமான சமத்துவமின்மையை அதிகரித்தது என்று அவர் கூறினார்.

12MP இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய, அதிகரித்து வரும்  வருமான சமத்துவமின்மை போக்கை மாற்றியமைப்பதற்கான வழிகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

என். கோபால் கிஷ்னம்

இவர்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு நபருக்கு RM57,000 க்கும் அதிகமான மொத்த தேசிய வருமானத்தை அடைய விரும்புகிறார்கள், இது ஒரு குடும்ப வருமானம் RM10,000 க்கு சற்று அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“ஆனால், தேசத்தின் அடிப்படை ஊதிய உயர்வு போன்ற போன்ற அரசாங்க கடமைகளை நாம் புறக்கணித்தால், அது 12MP மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை மோசமாக பிரதிபலிக்கும்,” என்று கிஷ்னம் வலியுறுத்தினார்.

மலேசியா 40 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான ஏற்றத்தாழ்வை குறைக்க   போராடி வருவதாகவும் ஆனால் அரசாங்கத்தின் முயற்சிகள் போதவில்லை என்கிறார்.

வெளிநாட்டு தொழிலாளர்கள்

நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதாக கிஷ்னம்  விளக்கினார், இது  குறைந்தபட்ச ஊதியத்திற்காகத்தான்.

“நாட்டின் அடிப்படை ஊதியத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு இல்லாமைக்கு இது ஒரு பெரிய காரணியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குடும்பங்களுக்குத் தேவையான RM7,000 குறைந்தபட்ச குடும்ப வருமானம் குறித்த சமீபத்திய சலசலப்பைக் குறிப்பிடும் கிஷ்னம், மலேசிய ஊதியங்கள் 12MP இலக்குகளை விட கீழ்நோக்கிச் செல்கின்றன என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்றார்.

விவசாயிகள், ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறை மற்றும் ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மே 1 முதல் RM1,500 குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் அறிவித்துள்ளார்.

இருப்பினும், அமைச்சர் தனது விதிவிலக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்று கிஷ்ணம் புலம்பினார்,

முறைசாரா துறை வேறு எந்த ஊதிய உயர்வையும் காணவில்லை

மனித வளங்களின் தேசிய சங்கத்தின் மலேசியத் தலைவர் ஜரீனா இஸ்மாயில், முறைப்படி அமையாத துறையில் தொழிலாளர்களை உள்ளடக்கியதாக விளக்கினார், அவர்களின் ஊதிய உயர்வுகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய மதிப்பீட்டை மட்டுமே சார்ந்துள்ளது.

“மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களை உருவாக்கும் இந்த வகைத் தொழிலாளர்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வை மறுப்பது, அவர்களது ஓய்வுக்காலச் சேமிப்பைக் சின்னபின்னமாக்கிவிட்டது”.

ஜரீனா இஸ்மாயில்

“குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு வாழ்வாதாரதை ஈடுகட்டும்  ஊதியமாக இல்லை, குறைந்த வருமானத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுப்பதன் மூலம் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதுதான்    அரசாங்க கொள்கையா?” என்று அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் ஜரீனா கேட்கிறார்.

ஐந்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட வணிகங்களில் உள்ள தொழிலாளர்கள், எடுத்துக்காட்டாக, போனஸ் அல்லது பிற சலுகைகளைப் பெறாதவர்கள் என்றும் அவர் விளக்கினார்.

“இருப்பினும் அவர்களது முதலாளிகளின் இலாப வரம்புதான் அரசாங்கத்தின் கருத்தில் அதிக எடையைக் கொண்டுள்ளது.” என்றும் சாடுகிறார்.

முதலாளிகள் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றால், அவர்களின் பலவீனமான சாதனையால் உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் அக்கறையற்றதாக இருப்பது,  மலேசியாயாவின் 12 திட்ட  இலக்குகள் எதிர் திசையில் போகும் என்கிறார்.

“வருமான ஏற்றத்தாழ்வு வளர்ந்து வரும் போக்கை மாற்றியமைக்க அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பு உள்ளது, ஆனால் அது வேறு வழியைத் தேர்வுசெய்கிறது,” என்கிறார்.

முழுமையாக செயல்படுத்த விருப்பமில்லை

12மலேசிய திட்டம்  B40 சம்பாதிப்பவர்கள் 2025 ஆம் ஆண்டிற்குள் மாத வருமானமாக  RM 4,200 ஐ அடைவதற்கு  இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கம் நாட்டின் அடிப்படை ஊதியத்தை RM1,500 ஐத் தாண்ட  தள்ளாடுகிறது என்று ஜரீனா சுட்டிக்காட்டினார்.

2025 க்கு முன் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், அரசாங்கம் அடையும் ஊதியத்தில் 35% கூட முழுமையாக செயல்படுத்த விரும்பவில்லை என்பதை ஜரீனா சுட்டிக்காட்டினார்.

குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடுத்த அதிகரிப்பு 2024 இல் நடைமுறைக்கு வர உள்ளது, மேலும் B40 வருமான அடைப்புக்குறியின் இலக்கு ஊதியத்தில் ஒரு  50%, அதாவது   RM2,100க்கு அலவிற்கு  கூடுதலை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று ஜரீனா கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியமான RM2,000ஐ நடைமுறைப்படுத்தினாலும், “தற்போதைய வறுமைக் கோட்டு வருமானமான RM2,028ஐ கூட எட்ட இயலாது ,” என்றும்  அவர் சாடினார். இது படு தோல்வியாகும்.