குயின் எலிசபெத் மருத்துவமனை 1ல் (QEH1) மருத்துவ ஊழியர்கள் நேற்று மின்தடையின் காரணமாக “பீதி நிலையில்” தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை பணியாளர் ஒருவர், 2014 ஆம் ஆண்டில் அதன் புதிய இரட்டைக் மாடிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.
“நாங்கள் டார்ச் விளக்குகளை வாங்கும் வரை அறுவை சிகிச்சை அறை இருட்டாக இருந்தது” என்று ஊழியர் ஒருவர் பத்திரிகையிடம் கூறினார்.
“மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) ஆகியவற்றில் ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜன்னல்களிலிருந்து வெளிச்சம் இருந்ததால் வார்டுகள் அவ்வளவு மோசமாக இல்லை என்றனர்.
“இருப்பினும், மின் தடை ஏற்பட்டபோது ஊழியர்கள் பீதி மற்றும் குழப்பமடைந்தனர்.”
நேற்று, சபா சுகாதார இயக்குனர் டாக்டர் ரோஸ் நானி முடின் கூறுகையில், காலையில் இருட்டடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குயின் எலிசபெத் மருத்துவமனை 1ல் உள்ள நோயாளிகளை குயின் எலிசபெத் மருத்துவமனை 2க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகள் குயின் எலிசபெத் மருத்துவமனை 2க்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காலை 11.54 மணியளவில் ஏற்பட்ட மின்வெட்டால் மருத்துவமனையின் இரட்டைக் மாடிகள் , சிறப்பு மருத்துவ மனைகள் மற்றும் பழைய மருத்துவப் பிரிவு ஆகியவை பாதிக்கப்பட்டதாக ரோஸ் கூறினார்.
சபா மின்சார வாரியம் (SESB) மருத்துவமனையின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க இரண்டு மாற்று ஜெனரேட்டர்களுடன் உதவியது, என்று அவர் கூறினார்.
அனைத்து வார்டுகளுக்கும் ICU விற்கும் போதுமான மற்றும் நிலையான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆப்பிரேசன் அறைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று ரோஸ் கூறினார்.
பத்திரிக்கையிடம் பேசிய குயின் எலிசபெத் மருத்துவமனை1-ன் பணாளர், மருத்துவமனையின் இரண்டு ஜெனரேட்டர்அலும் மின்சார தடை நிகழ்ந்த சற்று நேரத்திலேயே பழுதடைந்ததாகக் கூறினார்.