நஜிப், ஜாஹித் வழக்குகளில் நீதித்துறை ‘கூட்டுச் சதி’யுடன் செயல்படுகிறது என்பதை மறுக்கிறது

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) மற்றும் அவருக்கு முன் பதவியில் இருந்த நஜிப் அப்துல் ரசாக் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த தலைமை நீதிபதி தெங்கு மைமுன் டுவான் மாட்(Tengku Maimun Tuan Mat ) அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பெடரல் நீதிமன்ற தலைமை பதிவாளர் அலுவலகம் மறுத்துள்ளது.

அரசியல் தலைவர்களுக்கும் தெங்கு மைமுனுக்கும் இடையிலான “ரகசிய ஒப்பந்தம் அல்லது சட்டவிரோத ஒப்பந்தம்,” போன்ற குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காக காவல்துறை அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

“நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், தலைமை நீதிபதி அல்லது வேறு யாருடைய தலையீடும் இல்லாமல், சட்டத்தின்படி தொடர வேண்டும்,” என்று அவர்களின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

மேலும், “இந்த குற்றச்சாட்டுகள் நஜிப் மற்றும் ஜாஹித் மீதான நிலுவையில் உள்ள விசாரணையின் அடிப்படையில் நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கமாக உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 7 க்கு இடையில் PAS துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார்(Ahmad Samsuri Mokhtar) மற்றும் பல அரசியல் பிரமுகர்களின் மற்றொரு கட்சித் தலைவருக்கு இடையிலான சந்திப்பு  “கசிந்த ஆவணங்களின்” ஒரு பகுதியாக இந்தச் சதி குற்றச்சாட்டுகள் இருந்தன .

அந்த ஆவணத்தின்படி, ஒரு அரசியல்வாதி PAS தலைவர்களிடம், “அட்டர்னி ஜெனரலும் தலைமை நீதிபதியும் ஜாஹிட் மற்றும் நஜிப்பின் நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தண்டனை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று கூறினார்.

மலேசியாகினி, அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் மற்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நபர்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

நேற்று, அம்னோவின் மூத்த தலைவர் ஷாரிர் சமாட்(Shahrir Samad) கசிந்ததாகக் கூறப்படும் ஆவணம் குறித்து கவலை தெரிவித்தார்.

“ஆவணத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது நீதித்துறை அமைப்புக்கு களங்கம் ஏற்பட்டதைக் காட்டுகிறது,” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த ஆவணம் பல நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் மலேசியா ஹாட்(Malaysia Hot) எனப்படும் இணையதளம் வெளியிட்டபோது அது முக்கியத்துவம் பெற்றது.

சதியில் குறிப்பிடப்பட்ட சிலரைச் சந்தித்ததை சம்சூரி ஒப்புக்கொண்டார், ஆனால் ஆவணமே குப்பை என்றும், தனது பெயரைம்கூட  தவறாக எழுதியயுள்ளதாகவும்  கூறினார்.