சிங்கப்பூர்- இரண்டு மலேசியர்களை தூக்கிலிட உள்ளது

சிங்கப்பூரில் ஒரு மலேசியர் அடுத்த புதன் கிழமையும்  மற்றொரு மலேசியர் வரும் வெள்ளிக்கிழமை  தூக்கிலிடப்படுவார்கள்  என மனித உரிமை வழக்கறிஞர் எம்.ரவி தெரிவித்துள்ளார்.

36 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா, 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 44.96 கிராம் டயமார்பைன் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 2015ல் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரிக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் மரணதண்டனை நீதிமன்ற அவமதிப்பு என்று ரவி கூறினார்.

2019 ஆம் ஆண்டில் 42.7 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக மற்றொரு மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கம், 34, அடுத்த புதன்கிழமை திட்டமிட்டபடி தூக்கிலிடப்படவுள்ளார் .

பேராக்கைச் சேர்ந்த நாகேந்திரன் IQ 69-ஐக் கொண்டிருப்பதால் அவர்  மனநலம் குன்றியவராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தட்சிணாமூர்த்தி தனது வழக்கறிஞர்களுக்கு அளித்த கடிதப் பரிமாற்றங்களை அட்டார்னி ஜெனரல் அலுவலகம் துப்பறிந்த  காரணத்தால் தொடரப்பட்ட வழக்கிற்கும் அரசு தலைமை சட்ட அதிகாரி மீது தொடர்ந்த வழக்கிற்கும் தொடர்பு உள்ளதாக ரவி கூறினார்.

விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், விசாரணை யுத்திகள் மற்றும் பிறவற்றுடன் விவாதிக்கப்பட்ட கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் பத்திரிக்கையிடம் கூறினார்.

இந்த வழக்கு மே 20 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கைதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்எஃப் வயலட் நெட்டோவின் செய்தித் தொடர்பாளர் ரவி கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், திட்டமிட்டபடி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார் அவர்.

-freemalaysiatoday