மலேசியாவில் உள்ள அடிமைத் தொழிலாளர் நடைமுறைகளை விசாரிக்குமாறு அமெரிக்காவையோ அல்லது சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமோ (ILO) கேட்டுக் கொள்வதன், மூலம் ஒரு எளிதான வழியை மனிதவள அமைச்சர் எம்.சரவணன், எடுக்கக் கூடாது என்று பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கூறினார்.
“மலேசியாவில் உள்ள கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை விசாரிப்பது அல்லது தலையிடுவது அமெரிக்கா அல்லது ஐஎல்ஓவின் வேலை அல்ல, இது மலேசிய அரசாங்கம் மற்றும் மனித வள அமைச்சகத்தின் பொறுப்பு”
“வெளிநாட்டு அல்லது சர்வதேச அமைப்புகளின் உதவியை நடுவது கட்டாய தொழிலாளர் உழைப்பின் சாபத்தை அகற்றுவதற்கு சரியான வழி அல்ல” என்கிறார் அவர்.
“சரவணன், அதை அகற்றுவதில் கவனத்தைத் திருப்புவதற்கு முன், கட்டாய உழைப்பு ஏன் இருக்கிறது என்று கண்டறிய வேண்டும்” என்று தனது அறிக்கையின் வழி சரவணனின் கவனம் அடிப்படையில் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
ILO மற்றும் மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, கட்டாய உழைப்பு தொடர்பான எந்தவொரு விசாரணையையும் மனிதவள அமைச்சகத்திற்கு தெரிவிக்குமாறு சரவணன் கேட்டுக்கொண்டார், இதன் மூலம் மலேசிய தயாரிப்புகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் முன்பு தீர்வு காணலாம் என்று இந்த வார தொடக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
பல மலேசிய தயாரிப்புகள் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) ஏஜென்சியால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தாலும், அமெரிக்காவிடம் இருந்து அமைச்சகம் இதுவரை எந்த அறிக்கையையும் பெறவில்லை, இதனால் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம் என்று சரவணன் கூறினார்.
கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை முறையாக விசாரிக்க அமெரிக்கத் தூதரகம் மற்றும் ஐஎல்ஓவின் உதவியை சரவணன் நாடினர் என்பது உண்மை எனில், மனிதவள அமைச்சகத்தை வழிநடத்தும் நிர்வாகத் திறன் அவரிடம் இல்லை என்று இந்த செயல் குறிப்பதாக இராமசாமி கூறினார்.
“கட்டாய உழைப்பு என்பது முதலாளிகளின் அணுகுமுறையில் மாற்றத்துடன் இணைந்து பயனுள்ள அமலாக்க நடவடிக்கைகளால் ஒழிக்கப்படக்கூடிய ஒன்று என்று அமைச்சகம் நினைக்கிறது, பிரச்சினையைக் கையாள்வதில் இதைத்தான் நான் அனுபவமற்ற அல்லது எளிமையான அணுகுமுறை என்று அழைக்கிறேன்.”
உற்பத்தியின் தன்மை மற்றும் முறையின் காரணமாகவே கட்டாய உழைப்பு உள்ளது, என்கிறார் இராமசாமி.
“சுத்திகரிக்கப்படாத பொருட்களின் உற்பத்திக்கு மலிவான உழைப்பைப் பயன்படுத்தும் போக்கு இருந்தால், அது உழைப்பின் மீதுள்ள மதிப்பில் குறைந்தபட்ச ஆர்வத்தை குறிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் சரவணனின் முறையீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம், கட்டாய தொழிலாளர் விஷயங்களில் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்துடன் வழக்கமான தொடர்புகளை வைத்திருப்பதாக கூறியது.
-freemalaysiatoday